Bible Language

Jeremiah 48:2 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   எஸ்போனைக்குறித்து மோவாபுக்கு இருந்த பெத்தரிக்கம் இனி இராது; அது ஒரு ஜாதியாயிராதபடிக்கு அதை நிர்மூலமாக்குவேன் வாருங்களென்று அதற்கு விரோதமாகப் பொல்லாப்பை நினைத்திருக்கிறார்கள்; மத்மேனே, நீயும் சங்காரமாவாய்; பட்டயம் உன்னைத் தொடரும்.
IRVTA   எஸ்போனைக்குறித்து மோவாபுக்கு இருந்த பெருமை இனி இருக்காது; அது ஒரு தேசமாக இராமல் அதை அழிப்போம் வாருங்களென்று அதற்கு விரோதமாகப் பொல்லாப்பை நினைத்திருக்கிறார்கள்; மத்மேனே, நீயும் அழிக்கப்படுவாய்; பட்டயம் உன்னைத் தொடரும்.
ERVTA   மோவாப் மீண்டும் பாராட்டப்படாது. மோவாபின் தோல்விக்கு எஸ்போனின் ஆட்கள் திட்டமிடுவார்கள். அவர்கள், ‘வா, அந்த நாட்டிற்கு ஒரு முடிவு செய்வோம்’ என்று சொல்வார்கள். மத்மேனே, நீ மௌனமாக்கப்படுவாய். பட்டயம் உன்னைத் துரத்தும்.
RCTA   மோவாபுக்கு இனிப் புகழில்லை; எசேபோனில் அதற்கெதிராய்த் தீமை சூழ்ந்து, 'வாருங்கள், அதனை ஒரு நாடாய் இல்லாதவாறு சிதைப்போம்!' என்று திட்டமிட்டார்கள். மத்மேனே, நீயும் அழிக்கப்படுவாய், வாள் உன்னைத் தொடர்ந்து வரும்;
ECTA   போவாபின் புகழ் மங்கிவிட்டது; எஸ்போனில் அதற்குத் தீங்கிழைக்கத் திட்டமிடப்படுகிறது; "வாருங்கள்; அதனை ஒரு நாடாய் இல்லாதவாறு சிதைப்போம் ". மத்மேன்! நீயும் அழிக்கப்படுவாய்; வாள் உன்னைத் துரத்தி வரும்.