Bible Language

Romans 7:3 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   ஆகையால், புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் விபசாரியென்னப்படுவாள்; புருஷன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்தினின்று விடுதலையானபடியால், வேறொரு புருஷனை விவாகம்பண்ணினாலும் விபசாரியல்ல.
IRVTA   ஆகவே, கணவன் உயிரோடிருக்கும்போது அவள் வேறொரு மனிதனை திருமணம்செய்தால் அவள் விபசாரி என்று சொல்லப்படுவாள்; ஆனால், கணவன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்திலிருந்து விடுதலையானபடியால், வேறொரு மனிதனை திருமணம் செய்தாலும் அவள் விபசாரி இல்லை.
ERVTA   தன் கணவன் உயிரோடு இருக்கும்போதே ஒரு பெண் இன்னொருவனை மணந்து கொண்டால் அவள் விபசாரம் என்னும் குற்றத்துக்கு ஆளாகிறாள் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் அவளது கணவன் இறந்தபின் எல்லா திருமண விதிகளில் இருந்தும் அவள் சுதந்தரமாகிறாள். அப்போது அவள் இன்னொருவனை மணக்க விரும்பினால் அது விபசாரம் எனும் குற்றத்துக்கு ஆளாக்காது.
RCTA   ஆகையால், கணவன் உயிரோடிருக்கும்போதே அவள் வேறொருவனோடு வாழ்ந்தால், அவளுக்கு விபசாரி என்ற பெயர் கிடைக்கும்; ஆனால், கணவன் இறந்து போனால், அவள் திருமணச் சட்டத்தினின்று விடுதலைபெற்றவள் ஆகிறாள், ஆகவே அவள் வேறொருவனுக்கு மனைவியானால், விபசாரி அல்லள்.
ECTA   ஆகையால், கணவன் உயிரோடு இருக்கும்போது ஒரு பெண் வேறொருவரோடு வாழ்ந்தால், விபசாரி என்னும் பெயர் கிடைக்கும். ஆனால், கணவன் இறந்து போனால், அவர் திருமணச் சட்டத்தினின்று விடுதலை பெற்றவர் ஆகிறார், ஆகவே பின்பு அவர் வேறொருவருக்கு மனைவியானால், விபசாரி அல்ல.