Bible Language

Ezekiel 13:19 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   சாகத்தகாத ஆத்துமாக்களைக் கொல்வதற்கும், உயிரோடே இருக்கத்தகாத ஆத்துமாக்களை உயிரோடே காப்பாற்றுவதற்குமாக நீங்கள் பொய்க்குச் செவிகொடுக்கிற என் ஜனத்துக்குப் பொய் சொல்லுகிறதினாலே சில சிறங்கை வாற்கோதுமைக்காகவும் அப்பத்துண்டுகளுக்காகவும் என்னை என் ஜனத்துக்குள்ளே பரிசுத்தக்குலைச்சலாக்குவீர்களோ என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
IRVTA   சாகத்தகாத ஆத்துமாக்களைக் கொல்வதற்கும், உயிரோடு இருக்கத்தகாத ஆத்துமாக்களை உயிரோடு காப்பாற்றுவதற்குமாக நீங்கள் பொய்யைக் கேட்கிற என்னுடைய மக்களுக்குப் பொய் சொல்லுகிறதினாலே சில கைப்பிடியளவு வாற்கோதுமைக்காகவும் அப்பத்துண்டுகளுக்காகவும் என்னை என்னுடைய மக்களுக்குள்ளே பரிசுத்தக்குலைச்சலாக்குவீர்களோ என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
ERVTA   நான் முக்கியமானவனில்லை என்று ஜனங்களை நினைக்கும்படிச் செய்கிறீர்கள். சில பிடி வாற்கோதுமைக்காகவும் அப்பத்துண்டுகளுக்காகவும் அவர்களை எனக்கு எதிராக நீங்கள் திருப்புகிறீர்கள். நீங்கள் என் ஜனங்களிடம் பொய் கூறுகிறீர்கள். அவர்கள் பொய்களைக் கேட்க விரும்புகிறார்கள். வாழவேண்டிய ஜனங்களைக் கொல்லுகிறீர்கள். மரிக்கவேண்டிய ஜனங்களை வாழவைக்கிறீர்கள்.
RCTA   பொய்களைக் கேட்டு நம்பும் எம் மக்களிடம் பொய்களைச் சொல்லி, சாகாமல் இருக்க வேண்டியவர்களைச் சாகடித்து, உயிரோடிருக்கத் தகாதவர்களை உயிரோடு காத்தீர்கள்; இவ்வாறு, கைப்பிடியளவு வாற்கோதுமைக்காகவும், ஒருசில அப்பத் துண்டுகளுக்காகவும் நம் மக்கள் நடுவில் நம்மைப் பரிசுத்தமற்றவராய் ஆக்கினீர்கள்.
ECTA   கைப்பிடி அளவு வாற்கோதுமைக்காகவும், சில அப்பத்துண்டுகளுக்காகவும் என் மக்களிடையே எனக்குக் களங்கம் விளைவிக்கிறீர்கள். பொய்களுக்குச் செவிசாய்க்கும் என் மக்களிடம் பொய் சொல்லி, சாகாமல் இருக்க வேண்டியோரைச் சாகடித்து, உயிரோடு இருக்கக் கூடாதாரை உயிரோடு காத்துள்ளீர்கள்.