Bible Language

Ezekiel 1:27 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் அக்கினிமயமான சொகுசாவின் நிறமாயிருக்கக்கண்டேன்; அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும், அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக்கண்டேன்.
IRVTA   அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் அக்கினிமயமான உருகிப்பிரகாசிக்கிற உலோகத்தின் நிறமாக இருக்கக்கண்டேன்; அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும், அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக்கண்டேன்.
ERVTA   நான் அவரை இடுப்பிலிருந்து மேல் நோக்கிப்பார்த்தேன். அவர் சூடான உலோகத்தைப்போன்று இருந்தார். அவரைச் சுற்றிலும் நெருப்பு இருப்பதைப் போன்றிருந்தது. நான் அவரை இடுப்பிலிருந்து கீழ் நோக்கிப் பார்த்தேன். அது நெருப்பைப் போன்றிருந்தது. அவரைச் சுற்றிலும் அது மின்னியது.
RCTA   அவர் உடலின் உள்ளும் புறமும் சுற்றிலும் தீயொளி போல மின்னிய ஒருவித வெண்கலத்தின் உருவத்தைக் கண்டேன்; இடுப்பிலிருந்து மேலும் கீழும் சுற்றிலும் நெருப்பு மயமாய் ஒளிரும் பிரகாசத்தைக் கண்டேன்.
ECTA   அவரது இடைக்கு மேற்புறம் சுற்றிலும் பளபளக்கும் வெண்கலம் போன்றும். நெருப்பு சூழ்ந்திருப்பதுபோன்றும் இருக்க நான் கண்டேன். அவரது இடைக்குக் கீழ்புறம் நெருப்புப் போன்றும் சுற்றிலும் ஒளிமயமாயும் இருக்கக் கண்டேன்.