Bible Language

Ezekiel 20:7 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   உங்களில் அவரவர் தங்கள் கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளிவிட்டு, எகிப்தின் நரகலான விக்கிரகங்களால் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அவர்களோடே சொன்னேன்.
IRVTA   உங்களில் அவரவர் தங்களுடைய கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளிவிட்டு, எகிப்தின் அசுத்தமான சிலைகளால் உங்களைத் தீட்டுப்படுத்தாமல் இருப்பீர்களாக; உங்களுடைய தேவனாகிய யெகோவா நான் என்று அவர்களுடன் சொன்னேன்.
ERVTA   ‘நான் இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் அவர்களது அருவருப்பான விக்கிரகங்களை எறிந்து விடும்படிச் சொன்னேன். எகிப்தில் உள்ள அசுத்தமான சிலைகளோடு சேர்ந்து தீட்டுப்படுத்திக்கொள்ளாதீர்கள் என்று சொன்னேன். நானே உங்களது தேவனாகிய கர்த்தர்."
RCTA   மேலும் அவர்களைப் பார்த்து, 'உங்களுள் ஒவ்வொருவனும் தன் தன் கண்களுக்கு விருந்தளிக்கும் அருவருப்பானவற்றை விட்டெறியட்டும்; எகிப்து நாட்டின் சிலைகளால் தீட்டுப்படாதீர்கள்; ஆண்டவராகிய உங்கள் இறைவன் நாமே' என்று சொன்னோம்.
ECTA   மேலும், அவர்களைப் பார்த்து, "ஒவ்வொருவரும் தம் கண்களுக்கு விருந்தளிக்கும் அருவருப்பானவற்றை விட்டெறியட்டும். எகிப்தின் தெய்வச் சிலைகளால் உங்களையே தீட்டுப்படுத்திக் கொள்ளாதீர்கள்; நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர், "என்று சொன்னேன்.