Bible Language

Genesis 30:30 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம்; நான் வந்தபின் கர்த்தர் உம்மை ஆசீர்வதித்ததினால் அது மிகவும் பெருகியிருக்கிறது; இனி நான் என் குடும்பத்துக்குச் சம்பாத்தியம்பண்ணுவது எப்பொழுது என்றான்.
IRVTA   நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம்; நான் வந்தபின் யெகோவா உம்மை ஆசீர்வதித்ததால் அது மிகவும் பெருகியிருக்கிறது; இனி நான் என் குடும்பத்திற்குச் சம்பாதிப்பது எப்பொழுது” என்றான்.
ERVTA   நான் வந்து சேர்ந்தபோது உங்களிடம் குறைவான எண்ணிக்கையிலேயே மந்தைகள் இருந்தன. இப்போது ஏராளமாக உள்ளன. எப்பொழுதும் உங்களுக்காக ஏதாவது வேலை செய்தேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதித்தார். இப்போது நான் எனக்காக உழைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. நான் சொந்தமாக வீடு கட்டிக்கொள்ள வேண்டும்" என்றான்.
RCTA   நான் உம்மிடம் வருமுன் நீர் சொற்பச் சொத்தே உடையவராயிருந்தீர். இப்பொழுதோ பெருஞ் செல்வாராயினீர். நான் வரவே, ஆண்டவர் உம்மை ஆசீர்வதித்தார். இனிமேலாவது நான் என் சொந்தக் குடும்பத்திற்குப் பொருள் ஈட்டுவது முறையல்லவா என்றான்.
ECTA   நான் உம்மிடம் வருமுன் உமக்கிருந்தது கொஞ்சமே; இப்பொழுதோ மிகுதியாகப் பெருகிவிட்டது. நான் கால்வைக்கும் இடமெல்லாம் ஆண்டவர் உமக்கு ஆசி வழங்கியிருக்கிறார். என் குடும்பத்திற்காக நான் உழைப்பது எப்போது?" என்றார்.