Bible Language

Isaiah 28:22 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   இப்பொழுதும் உங்கள் கட்டுகள் பலத்துப்போகாதபடிக்குப் பரியாசம்பண்ணாதிருங்கள்; தேசம் அனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட சங்காரத்தின் செய்தியைச் சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவராலே கேள்விப்பட்டிருக்கிறேன்.
IRVTA   இப்பொழுதும் உங்கள் கட்டுகள் பலத்துப்போகாதபடிக்குப் பரியாசம் செய்யாதிருங்கள்; தேசம் அனைத்தின்மேலும் தீர்மானிக்கப்பட்ட அழிவின் செய்தியைச் சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவராலே கேள்விப்பட்டிருக்கிறேன்.
ERVTA   இப்பொழுது, நீங்கள் அவற்றுக்கு எதிராகப் போரிட வேண்டாம். நீங்கள் செய்தால், உங்களைச் சுற்றியுள்ள கயிறுகள் இறுக்கும். நான் கேட்ட வார்த்தைகள் மாறாது. அந்த வார்த்தைகள் பூமியை ஆளுகின்ற சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து வந்தவை. இது நிகழ்ந்தே தீரும்.
RCTA   ஆகையால் இப்பொழுது ஏளனம் செய்வதை நிறுத்துங்கள்; இல்லையேல் உங்கள் தளைகள் இறுகிப்போகும்; ஏனெனில் நாடு முழுவதையும் அழிக்கும்படியாகச் சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் இட்ட ஆணையை நான் கேட்டிருக்கிறேன்.
ECTA   உங்கள் தளைகள் கடினமாகாதபடி இகழ்வதை விட்டுவிடுங்கள்; ஏனெனில் நாடு முழுவதையும் அழித்தொழிக்குமாறு படைகளின் ஆண்டவராகிய என் தலைவர் இட்ட ஆணையை நான் கேட்டேன்.