Bible Language

Isaiah 29:16 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   ஆ, நீங்கள் எவ்வளவு மாறுபாடுள்ளவர்கள்! குயவன் களிமண்ணுக்குச் சமானமாக எண்ணப்படலாமோ? உண்டாக்கப்பட்டது தன்னை உண்டாக்கினவரைக்குறித்து: அவர் என்னை உண்டாக்கினதில்லை என்றும்; உருவாக்கப்பட்டது தன்னை உருவாக்கினவரைக்குறித்து: அவருக்குப் புத்தியில்லையென்றும் சொல்லத்தகுமோ?
IRVTA   ஆ, நீங்கள் எவ்வளவு மாறுபாடுள்ளவர்கள்! குயவன் களிமண்ணுக்குச் சமானமாக கருதப்படலாமோ? உண்டாக்கப்பட்ட பொருள் தன்னை உண்டாக்கினவரைக்குறித்து: அவர் என்னை உண்டாக்கினதில்லை என்றும்; உருவாக்கப்பட்ட பொருள் தன்னை உருவாக்கினவரைக்குறித்து: அவருக்குப் புத்தியில்லையென்றும் சொல்லத்தகுமோ?
ERVTA   நீங்கள் குழம்பி இருக்கிறீர்கள். குயவனை களிமண்ணுக்குச் சமமாக நீங்கள் நினைக்கிறீர்கள். ஒருவனால் செய்யப்பட்ட பொருள் அவனைப் பார்த்து ‘நீ என்னை உன்டாக்கவில்லை’ என்று சொல்ல முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இது, ஒரு பானை தன்னை உருவாக்கியவனிடம் ‘நீ புரிந்துகொள்கிறதில்லை’ என்று சொல்வது போன்றதாகும்.
RCTA   இதென்ன முறைகேடு! குயவனுக்குக் களிமண் சமமாகுமோ? கைவேலை தொழிலாளியை நோக்கி, "என்னைச் செய்தவன் நீயல்ல" என்று சொல்லலாமோ? மண்ணால் செய்த உருவம் சிற்பியை நோக்கி, "உனக்கு அறிவில்லை" என்று சொல்வதெப்படி?
ECTA   நீங்கள் செய்யும் முறைகேடுதான் என்ன? குயவனுக்குக் களிமண் ஈடாகுமோ? கைவேலை தன் கைவினைஞனை நோக்கி "நீர் என்னை உருவாக்கவில்லை" என்று கூறலாமோ? வனையப்பட்டது தன்னை வனைந்தவனை நோக்கி "உமக்கு அறிவில்லை" என்று சொல்லலாமோ?