Versions
TOV அப்பொழுது வீரனுடைய பட்டயம் அல்லாத பட்டயத்தாலே அசீரியன் விழுவான்; நீசனுடைய பட்டயம் அல்லாத பட்டயமே அவனைப் பட்சிக்கும்; அவன் பட்டயத்துக்குத் தப்ப ஓடுவான்; அவன் வாலிபர் கலைந்துபோவார்கள்.
IRVTA அப்பொழுது வீரனுடைய பட்டயம் அல்லாத பட்டயத்தாலே அசீரியன் விழுவான்; மனிதனுடைய பட்டயம் அல்லாத பட்டயமே அவனைப் பட்சிக்கும்; அவன் பட்டயத்திற்குத் தப்ப ஓடுவான்; அவன் வாலிபர் கலைந்துபோவார்கள்.
ERVTA அசீரியா வாளால் தோற்கடிக்கப்படும். ஆனால், அந்த வாள் ஒரு மனிதனின் வாளல்ல. அசீரியா அழிக்கப்படும். ஆனால், அந்த அழிவானது மனிதனின் வாளிலிருந்து வராது. அசீரியா தேவனுடைய வாளிலிருந்து தப்பி ஓடுவான். ஆனால், இளைஞர்கள் கைப்பற்றப்பட்டு அடிமைகளாக்கப்படுவார்கள்.
RCTA அசீரியன் வாளால் வீழ்வான், ஆனால் மனிதனின் வாளாலன்று; வாளொன்று அவனை விழுங்கும், ஆனால் மனிதனின் வாளன்று; வாள் முகத்துக்கு அஞ்சி ஓடுவான்; அவனுடைய இளம் போர் வீரர் அடிமைகளாய் வேலை செய்வர்.
ECTA "அசீரியன் வாளால் வீழ்வான்; ஆனால் மனிதரின் வாளாலன்று; அவனை வாள் விழுங்கிவிடும்; ஆனால் அது மனிதரின் வாளன்று; அவன் வாள் கண்டு, தப்பி ஓடுவான்; அவனுடைய இளங்காளையர் அடிமையாக்கப்படுவர்.