Bible Language

Jeremiah 23:39 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   ஆதலால், இதோ, நான் உங்களை மறக்கவே மறந்து, உங்களையும், நான் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் கொடுத்த நகரத்தையும், எனக்கு முன்பாக இராதபடிக்குக் கைவிட்டு,
IRVTA   ஆதலால், இதோ, நான் உங்களை முற்றிலும் மறந்து, உங்களையும், நான் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் கொடுத்த நகரத்தையும், எனக்கு முன்பாக இல்லாதபடி கைவிட்டு,
ERVTA   ஆனால், நீ எனது செய்தியை பெருஞ்சுமை என்று அழைத்தாய். எனவே, நான் உன்னைப் பெருஞ்சுமையைப் போன்று தூக்கித் தூர எறிவேன். உங்கள் முற்பிதாக்களுக்கு எருசலேம் நகரத்தைக் கொடுத்தேன். ஆனால், நான் உன்னையும் அந்நகரத்தையும் என்னை விட்டுத் தூர எறிவேன்.
RCTA   இதோ, உங்களையும், நாம் உங்கள் தந்தையர்க்கும் உங்களுக்கும் கொடுத்திருக்கும் நகரத்தையும் நம் முன்னிலையிலிருந்து தூக்கித் தொலைவில் எறிவோம்;
ECTA   ஆதலால், நான் உங்களை முற்றிலும் மறந்து, உங்களையும் உங்களுக்கும் உங்கள் மூதாதையருக்கும் நான் கொடுத்த நகரையும் என் முன்னிலையிலிருந்து தூக்கி வீசியெறிவேன்.