Bible Language

Numbers 22:30 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   கழுதை பிலேயாமை நோக்கி: நீர் என்னைக் கைக்கொண்ட காலமுதல் இந்நாள்வரைக்கும் நீர் ஏறின கழுதை நான் அல்லவா? இப்படி உமக்கு எப்போதாகிலும் நான் செய்தது உண்டா என்றது. அதற்கு அவன்: இல்லை என்றான்.
IRVTA   கழுதை பிலேயாமை நோக்கி: “நீர் என்னைக் கைக்கொண்ட காலமுதல் இந்நாள்வரைக்கும் நீர் ஏறின கழுதை நான் அல்லவா? இப்படி உமக்கு எப்போதாவது நான் செய்தது உண்டா” என்றது. அதற்கு அவன்: “இல்லை” என்றான்.
ERVTA   ஆனால் கழுதையோ பிலேயாமிடம், "பாரும்! நான் உமக்குச் சொந்தமான கழுதை! பல ஆண்டுகளாக என்மீது சவாரிசெய்து வருகிறீர். நான் இதற்கு முன்னால் இதுபோல் நடந்து கொள்ள வில்லை என்பது உமக்குத் தெரியும்!" என்றது. இதற்குப் பிலேயாம், "இது உண்மைதான்" என்றான்.
RCTA   கோவேறு கழுதை: என் மீது ஏறின நாள்முதல் இந்நாள் வரையிலும் நீர் சவாரி செய்த கழுதை நான்தான் அல்லவா? இப்படி எப்போதேனும் நான் உம்மிடம் துடுக்குச் செய்ததுண்டோ என்று கேட்க, பாலாம்:
ECTA   கழுதை பிலயாமிடம், "நான் உம் கழுதையன்றோ? இன்றுவரை உம் வாழ்நாளெல்லாம் என் மீது ஏறி வந்துள்ளீரே! எப்போதாவது நான் இப்படிச் செய்து பழக்கமுண்டா?" என்றது, அதற்கு அவர், "இல்லை" என்றார்.