Bible Language

1 Samuel 6:21 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   கீரியாத்யாரீமின் குடிகளுக்கு ஆட்களை அனுப்பி: பெலிஸ்தர் கர்த்தருடைய பெட்டியைத் திரும்ப அனுப்பினார்கள்; நீங்கள் வந்து, அதை உங்களிடத்துக்கு எடுத்துக்கொண்டு போங்கள் என்று சொல்லச்சொன்னார்கள்.
IRVTA   கீரியாத்யாரீமின் குடியிருப்புகளுக்கு ஆட்களை அனுப்பி: பெலிஸ்தர்கள் யெகோவாவுடைய பெட்டியைத் திரும்ப அனுப்பினார்கள்; நீங்கள் வந்து, அதை உங்களிடத்திற்கு எடுத்துக்கொண்டு போங்கள் என்று சொல்லச்சொன்னார்கள். PE
ERVTA   கீரியாத்யாரீம் என்ற இடத்தில் ஒரு ஆசாரியன் இருந்தான். அங்குள்ள ஜனங்களுக்கு பெத்ஷிமேசின் ஜனங்கள் தூது அனுப்பினார்கள். தூதுவர்கள், "பெலிஸ்தர் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைத் திரும்பக் கொண்டு வந்துவிட்டனர். இதனை உங்கள் நகரத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்" என்றனர்.
RCTA   பிறகு அவர்கள் கரியாத்தியாரிம் குடிகளுக்குத் தூதர்களை அனுப்பி, "பிலிஸ்தியர் ஆண்டவருடைய பேழையைத் திரும்பக் கொண்டு வந்துள்ளார்கள். நீங்கள் வந்து அதை உங்கள் இடத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்" என்று சொல்லச் சொன்னார்கள்.
ECTA   ஆகவே, கிரியத்து எயாரிம் வாழ் மக்களுக்கு ஆள்களை அனுப்பி, ஆண்டவரின் பேழையைப் பெலிஸ்தியர் திருப்பி அனுப்பிவிட்டார்கள். நீங்கள் வந்து அதை உங்களிடம் எடுத்துச் சொல்லுங்கள் "என்று சொன்னார்கள்.