Bible Language

1 Corinthians 14:2 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   ஏனெனில், அந்நிய பாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
IRVTA   ஏனென்றால், அந்நிய மொழியில் பேசுகிறவன், ஆவியானவராலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாமலிருக்கிறபடியினாலே, அவன் மனிதர்களிடம் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
ERVTA   ஏனென்று உங்களுக்கு விளக்குகிறேன். வேறு மொழியில் பேசும் வரத்தைப் பெற்றவன் மக்களிடம் அதனைப் பேசவில்லை. அவன் தேவனிடம் பேசுகிறான். வேறு எவரும் அவனைப் புரிந்துகொள்வதில்லை. அவன் ஆவியானவர் மூலமாக இரகசியங்களை வெளிப்படுத்துகிறான்.
RCTA   எனெனில், பரவசப் பேச்சுப் பேசுகிறவன் மனிதர்களிடம் பேசுவதில்லை; கடவுளிடமே பேசுகிறான்; அவன் பேசுவதை யாருமே புரிந்து கொள்வதில்லை; ஆவியின் ஏவுதலால் மறைபொருள்களையே பேசுகிறான்.
ECTA   ஏனெனில் பரவசப்பேச்சு பேசுகிறவர் மக்களிடமல்ல, கடவுளிடமே பேசுகிறார். அவர் பேசுவது எவருக்கும் விளங்குவதில்லை. அவர் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மறைபொருள்களைப் பேசுகிறார்.