Bible Language

2 Chronicles 36:23 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ அவன் போகட்டும், அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடிருப்பாராக என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று, தன் ராஜ்யம் எங்கும் எழுதியனுப்பி விளம்பரம்பண்ணினான்.
IRVTA   அவருடைய மக்கள் எல்லோரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ அவன் போகட்டும், அவனுடைய தேவனாகிய யெகோவா அவனோடிருப்பாராக என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று தன் தேசமெங்கும் எழுதியனுப்பி விளம்பரம்செய்தான். PE
ERVTA   பெர்சியா அரசனாகிய கோரேசு கூறுவது: பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் என்னை பூமி முழுவதற்கும் அரசன் ஆக்கினார். எருசலேமில் அவர் தனக்கொரு ஆலயத்தைக் கட்டும்படி பொறுப்பளித் துள்ளார். இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாகிய நீங்கள் எருசலேமிற்குப் போகும்படி விடுவிக்கிறேன். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடு இருப்பாராக.
RCTA   பாரசீக அரசன் சீருஸ் சொல்லுகிறதாவது: விண்ணகக் கடவுளாகிய ஆண்டவர் பூமியின் நாடுகளை எல்லாம் எனக்கு அடிமைப்படுத்தி, யூதாவிலுள்ள யெருசலேமில் தமக்கு ஓர் ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டுள்ளார். எனவே உங்கள் நடுவே வாழ்ந்து வரும் அவருடைய மக்கள் அனைவரும் யெருசலேமுக்குப் போகட்டும். அவர்களின் கடவுளாகிய ஆண்டவர் அவர்களோடு இருப்பாராக!" என்று எங்கும் விளம்பரம் செய்தான்.
ECTA   "பாரசீக மன்னராகிய சைரசு என்னும் யாம் கூறுவது இதுவே; விண்ணகக் கடவுளாம் ஆண்டவர் மண்ணக அரசுகள் எல்லாவற்றையும் எனக்கு அளித்துள்ளார். மேலும் யூதாவிலுள்ள எருசலேமில் அவருக்குத் திருக்கோவில் எழுப்புமாறு எனக்குப் பணித்துள்ளார். எனவே, அவருடைய மக்களாக இருப்பவர் அங்கு செல்லட்டும்! கடவுளாம் ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!"