Bible Language

2 Chronicles 35:21 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அவன் இவனிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: யூதாவின் ராஜாவே, எனக்கும் உமக்கும் என்ன? நான் இப்போது உமக்கு விரோதமாய் அல்ல, என்னோடே யுத்தம்பண்ணுகிற ஒருவனுக்கு விரோதமாய்ப் போகிறேன்; நான் தீவிரிக்க வேண்டுமென்று தேவன் சொன்னார்; தேவன் என்னோடிருக்கிறார்; அவர் உம்மை அழிக்காதபடிக்கு அவருக்கு எதிரிடை செய்வதை விட்டுவிடும் என்று சொல்லச்சொன்னான்.
IRVTA   அவன் இவனிடத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பி: யூதாவின் ராஜாவே, எனக்கும் உமக்கும் என்ன? நான் இப்போது உமக்கு விரோதமாக அல்ல, என்னோடு போர்செய்கிற ஒருவனுக்கு விரோதமாகப் போகிறேன்; நான் விரைவாக செயல்படவேண்டுமென்று தேவன் சொன்னார்; தேவன் என்னோடிருக்கிறார்; அவர் உம்மை அழிக்காமலிருக்க அவருக்கு எதிராகச் செய்வதை விட்டுவிடும் என்று சொல்லச்சொன்னான்.
ERVTA   ஆனால் நேகோ யோசியாவுக்குத் தூதுவர்களை அனுப்பினான். அவர்கள், "யோசியா அரசனே! இந்தப் போர் உங்களுக்கு எதிரானது அல்ல. நான் உனக்கு எதிராகச் சண்டை செய்ய வரவில்லை. நான் என் பகைவர்களுக்கு எதிராகச் சண்டை செய்ய வந்திருக்கிறேன். தேவன் என்னை விரைவாகச் செல்லுமாறு சொன்னார். தேவன் என் பக்கத்தில் உள்ளார். எனவே எனக்கு எதிராகப் போரிடவேண்டாம். நீ எனக்கு எதிராகப் போரிட்டால் தேவன் உன்னை அழிப்பார்!" என்றனர்.
RCTA   அவனோ இவனிடம் தூதரை அனுப்பி, "யூதாவின் அரசே, உமக்கும் எனக்கும் பகை ஒன்றுமில்லை. நான் உம்மை எதிர்த்து வரவில்லை; வேறொருவனோடு போரிடவே வந்துள்ளேன். நான் உடனே செய்ய வேண்டும் என்பது கடவுளின் கட்டளை. கடவுள் என்னோடு இருப்பதால் நீர் அவரை எதிர்த்து நிற்க வேண்டாம். இல்லாவிடில், அவர் உம்மைக் கொன்று விடுவார்" என்று சொல்லச் சொன்னான்.
ECTA   ஆனால் எகிப்திய மன்னன் அவரிடம் தூதரை அனுப்பி, "யூதாவின் அரசே! உமக்கும் எனக்கும் என்ன? இன்று நான் உமக்கெதிராகப் படையெடுத்துவரவில்லை. மாறான, வேறொருவனுடன் போரிடவே நான் செல்கிறேன். நான் இதனை விரைவாகச் செய்ய வேண்டுமென்று கடவுள் கூறியுள்ளார். என்னோடு இருக்கும் கடவுளை எதிர்ப்பதை நீர் நிறுத்துவீர்! இல்லையெனில், அவர் உம்மை அழித்துவிடுவார்" என்றார்.