Bible Language

2 Kings 10:13 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   யூதாவின் ராஜாவாகிய அகசியாவின் சகோதரரை அங்கே கண்டு, நீங்கள் யார் என்று கேட்டான். அவர்கள்: நாங்கள் அகசியாவின் சகோதரர்; நாங்கள் ராஜாவின் பிள்ளைகளையும் ராஜஸ்திரீயின் பிள்ளைகளையும் வினவுகிறதற்குப் போகிறோம் என்றார்கள்.
IRVTA   யூதாவின் ராஜாவாகிய அகசியாவின் சகோதரர்களை அங்கே கண்டு, நீங்கள் யார் என்று கேட்டான். அவர்கள்: நாங்கள் அகசியாவின் சகோதரர்கள்; நாங்கள் ராஜாவின் பிள்ளைகளையும் ராஜாத்தியின் பிள்ளைகளையும் நலம் விசாரிப்பதற்குப் போகிறோம் என்றார்கள்.
ERVTA   யூதாவின் அரசனான அகசியாவின் உறவினர்களை அங்கே சந்தித்தான். யெகூ அவர்களைப் பார்த்து, "நீங்கள் யார்?" என்றான். அதற்கு அவர்கள் "நாங்கள் அகசியாவின் உறவினர்கள். நாங்கள் அரசனின் மகன்களையும் ராஜ மாதாவின் (யேசபேல்) மகன்களையும் பார்ப்பதற்கு வந்திருக்கிறோம்" என்றனர்.
RCTA   அப்போது யூதா அரசன் ஒக்கோசியாசின் சகோதரர் அங்கு இருக்கக் கண்டான். ஏகு அவர்களை நோக்கி, "நீங்கள் யார்?" என அவர்களைக் கேட்டான். அவர்கள், "நாங்கள் ஒக்கோசியாசின் சகோதரர்; அரசரின் புதல்வர்களையும் அரசியின் புதல்வர்களையும் கண்டு அவர்களுக்கு எங்கள் மரியாதையைச் செலுத்த வந்துள்ளோம்" என்று மறுமொழி கூறினர்.
ECTA   அங்கு ஏகூ யூதாவின் அரசனான அகசியாவின் உறவினரைச் சந்தித்து, "நீங்கள் யார்?" என்று கேட்டான். அவர்கள், "நாங்கள் அகசியாவின் உறவினர். அரசரின் மைந்தர்களையும் பட்டத்தரசியின் மைந்தர்களையும் நலம் விசாரிக்க வந்துள்ளோம்" என்று மறுமொழி கூறினர்.