Bible Language

2 Kings 14:8 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அப்பொழுது அமத்சியா யெகூவின் குமாரனாகிய யோவாகாசின் குமாரன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி: நம்முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம் வா என்று சொல்லச் சொன்னான்.
IRVTA   அப்பொழுது அமத்சியா யெகூவின் மகனாகிய யோவாகாசின் மகன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவிடத்தில் பிரதிநிதிகளை அனுப்பி: நம்முடைய திறமையைப் பார்ப்போம் வா என்று சொல்லச் சொன்னான்.
ERVTA   அமத்சியா தூதுவர்களை யெகூவின் மகனும் யோவாகாசின் மகனும், இஸ்ரவேலின் அரசனுமான யோவாசிடம் அனுப்பினான். அவன், "வா, நேரில் ஒருவரையொருவர் சந்தித்து போரிட்டுப் பார்ப்போம்" என்று சொல்லிவிட்டான்.
RCTA   அப்போது அமாசியாசு இஸ்ராயேலின் அரசன் ஏகுவின் மகன் யோவக்காசுக்குப் பிறந்தவனாகிய யோவாசிடம் ஆள் அனுப்பி, "வாரும், போர்க்களத்தில் நேருக்கு நேர் சந்திப்போம்" என்று சொல்லச் சொன்னான்.
ECTA   பின்பு அவன் இஸ்ரயேலின் அரசனும் ஏகூவின் மகன் யோவகாசின் புதல்வனுமாகிய யோவாசிடம் தூதனுப்பி, "வாரும்! போர்க்களத்தில் நேருக்கு நேர் சந்திப்போம்" என்று சொல்லச் சொன்னான்.