Bible Language

2 Samuel 10:19 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அப்பொழுது ஆதாரேசரைச் சேவிக்கிற சகல ராஜாக்களும் தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டதைக் கண்டு, இஸ்ரவேலரோடே சமாதானம்பண்ணி, அவர்களைச் சேவித்தார்கள். அப்புறம் அம்மோன் புத்திரருக்கு உதவிசெய்ய சீரியர் பயப்பட்டார்கள்.
IRVTA   அப்பொழுது ஆதாரேசருக்கு பணிவிடை செய்கிற எல்லா ராஜாக்களும் தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறியடிக்கப்பட்டதைக் கண்டு, இஸ்ரவேலர்களோடு சமாதானம்செய்து, அவர்களுக்கு பணிவிடை செய்தார்கள். அதன்பின்பு அம்மோன் மக்களுக்கு உதவிசெய்ய சீரியர்கள் பயப்பட்டார்கள். PE
ERVTA   ஆதாதேசருக்கு உதவ வந்த அரசர்கள் இஸ்ரவேலர் வென்றதைக் கண்டார்கள். எனவே அவர்கள் இஸ்ரவேலரோடு சமாதானம் செய்து அவனுக்குப் பணிவிடைச் செய்தனர். அம்மோனியருக்கு மீண்டும் உதவுவதற்கு ஆராமியர்கள் அஞ்சினார்கள்.
RCTA   அப்பொழுது ஆதரேஜேரின் தோழமை அரசர் அனைவரும் தாங்கள் இஸ்ராயேலரால் தோற்கடிக்கப் பட்டதைக் கண்டு அஞ்சி நடுங்கி, ஐம்பத்தெட்டாயிரம் வீரரோடு சிதறி ஓடினர். பிறகு அவர்கள் இஸ்ராயேலோடு சமாதானம் செய்து கொண்டு இஸ்ராயேலுக்கு அடிமைகள் ஆயினர். அன்று முதல் அம்மோனியருக்கு உதவி செய்ய அவர்கள் துணியவில்லை.
ECTA   அததேசருக்குத் கப்பம் கட்டி வந்த மன்னர்கள் அனைவரும் இஸ்ரயேலிரிடம் தாங்கள் தோற்றத்தைக் கண்டு, அவர்களோடு சமாதானம் செய்து அவர்களுக்குப் பணிந்திருந்தனர். இதற்கு பின் சிரியர் அம்மோனியருக்கு உதவ அஞ்சினர்.