Bible Language

2 Samuel 23:8 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   தாவீதுக்கு இருந்த பராக்கிரமசாலிகளின் நாமங்களாவன: தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் எண்ணூறுபேர்களின்மேல் விழுந்து, அவர்களை ஒருமிக்க வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரானானவன்.
IRVTA   தாவீதுக்கு இருந்த பலசாலிகளின் பெயர்கள்: தக்கெமோனியின் மகனான யோசேப்பாசெபெத் என்பவன் இராணுவ அதிகாரிகளின் தலைவன்; இவன் 800 பேரை ஒன்றாக வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரைச்சேர்த்தவன்.
ERVTA   இவை தாவீதின் பலம்பொருந்திய வீரர்களின் பெயர்கள்: தேர்ப்படை அதிகாரிகளின் தலைவன் தக்கெமோனியின் மகனாகிய யோசேப்பாசெபெத். அவன் அதீனோஏஸ்னி எனவும் அழைக்கப்பட்டான். யோசேப்பாசெபெத் 800 பேரை ஒரே நேரத்தில் கொன்றவன்.
RCTA   தாவீதுக்கு இருந்த வல்லமையுள்ள மனிதர்களின் பெயர்களாவன: மூவரில் மிகுந்த ஞானமுடைய தலைவனாய்த் தலைமை இருக்கையில் வீற்றிருந்தவனே முதல்வனாம். அவன் மிகவும் நுண்ணிய மரப்பூச்சியைப் போல் எண்ணுறு பேரை ஒரே சமயத்தில் வெட்டி வீழ்த்தினான்.
ECTA   (7) தாவீதோடிருந்த வீரர்களின் பெயர்கள்: தக்கமேனியன் யோசப்பாசெபத்து மூவருள் முதல்வனாக இருந்த அவன், "எஸ்னீயன் அதினோ" என்று அழைக்கப்பட்டான். ஏனெனில் அவன் ஒரே சமயத்தில் எண்ணூறு பேரைத் தாக்கிக் கொன்றான்.