Bible Language

2 Samuel 7:23 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு நிகரான ஜனமும் உண்டோ? பூலோகத்து ஜாதிகளில் இந்த ஒரே ஜாதியைத் தேவன் தமக்கு ஜனமாக மீட்கிறதற்கும், தமக்குக் கீர்த்தி விளங்கப்பண்ணுகிறதற்கும் ஏற்பட்டாரே; தேவரீர் எகிப்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்த உம்முடைய ஜனத்திற்கு முன்பாகப் பயங்கரமான பெரிய காரியங்களை நடத்தி, உம்முடைய தேசத்திற்கும், அதிலிருந்த ஜாதிகளுக்கும், அவர்கள் தேவர்களுக்கும், உமது மகிமையை விளங்கச்செய்து,
IRVTA   உம்முடைய மக்களான இஸ்ரவேலர்களுக்கு நிகரான மக்களும் உண்டோ? பூலோகத்து மக்களில் இந்த ஒரே மக்களை தேவன் தமக்கு மக்களாக மீட்பதற்கும், தமக்குப் புகழ்ச்சி விளங்கச்செய்வதற்கும் ஏற்படுத்தினாரே; தேவரீர் எகிப்திலிருந்து மீட்டுக் கொண்டுவந்த உம்முடைய மக்களுக்கு முன்பாகப் பயங்கரமான பெரிய காரியங்களை நடத்தி, உம்முடைய தேசத்திற்கும், அதிலிருந்த மக்களுக்கும், அவர்கள் தெய்வங்களுக்கும், உமது மகிமையை விளங்கச்செய்து,
ERVTA   "உமது ஜனங்களாகிய இஸ்ரவேலருடையதைப் போன்று இவ்வுலகில் வேறு எந்த ஜனங்களும் இல்லை. அவர்கள் விசேஷமான ஜனங்கள். அவர்கள் அடிமைகளாயிருந்தார்கள், ஆனால் நீர் அவர்களை எகிப்திலிருந்து அழைத்து வந்து விடுதலை அடைய வைத்தீர். அவர்களை உமது ஜனங்களாக மாற்றினீர். அவர்களை உமது ஜனங்களாக்கினீர். உமது ஜனங்களுக்காக பெரிய காரியங்களையும் அற்புதங்களையும் செய்தீர். உமது தேசத்திற்காக (நிலம்) அற்புதமான காரியங்களைச் செய்தீர்.
RCTA   உம்முடைய மக்களாகிய இஸ்ராயேலைப் போல் இவ்வுலகில் வேறு மக்களும் உண்டோ? புறவினத்தாருள் இந்த இனத்தை மட்டுமே கடவுள் மீட்டு, அவர்களைத் தம் சொந்த மக்களாக ஏற்படுத்தித் தமது புகழ் விளங்கச் செய்துள்ளார்; நீர் எகிப்திலிருந்து மீட்ட உம்முடைய மக்களுக்கு முன்பாக மகத்தானவற்றையும் பயங்கரமானவற்றையும் அவர்களுக்காகச் செய்து, அந்த எகிப்தியரையும் அவர்களுடைய தேவர்களையும் வதைத்தீர்!
ECTA   உம் மக்கள் இஸ்ரயேலரைப் போல் வேறு யார் உளர்? அவர்கள் உம் மக்களாக்கிக் கொள்ளுமாறும் உம் பெயர் விளங்குமாறும் கடவுளாகிய நீரே சென்று உலகின் ஒப்பற்ற அந்த இனத்தை மீட்டு, அவர்களுக்காக வியத்தகு அருஞ்செயல்கள் புரிந்தீர்! எகிப்து நாட்டினின்றும் வேற்று இனங்களினின்றும் அவர்களின் தெய்வங்களினின்றும் நீரே உம் மக்களை மீட்டீர்!