Bible Language

Ezekiel 46:2 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அப்பொழுது அதிபதி வெளிவாசல் மண்டபத்தின் வழியாய் பிரவேசித்து, வாசல் நிலையண்டையிலே நிற்கக்கடவன்; ஆசாரியர்களோ அவனுடைய தகனபலியையும், அவனுடைய சமாதான பலிகளையும் படைக்கக்கடவர்கள்; அவன் வாசற்படியிலே ஆராதனை செய்து, பின்பு புறப்படுவானாக; அந்த வாசல் சாயங்காலமட்டும் பூட்டப்படாதிருப்பதாக.
IRVTA   அப்பொழுது இளவரசன் வெளிவாசல் மண்டபத்தின் வழியாக நுழைந்து, வாசற்படி அருகில் நிற்கவேண்டும்; ஆசாரியர்களோ அவனுடைய தகனபலியையும், அவனுடைய சமாதான பலிகளையும் படைக்கவேண்டும்; அவன் வாசற்படியிலே ஆராதனை செய்து, பின்பு புறப்படுவானாக; அந்த வாசல் மாலைவரை பூட்டப்படாமல் இருப்பதாக.
ERVTA   அப்பொழுது அதிபதி வெளிவாசல் மண்டபத்தின் வழியாக நுழைந்து வாசலருகில் நிற்பான். பிறகு ஆசாரியர்கள் அதிபதியுடைய தகன பலிகளையும், சமாதான பலிகளையும் படைப்பார்கள். அதிபதி வாசல் படியிலேயே தொழுகை செய்வான். பிறகு அவன் வெளியேறுவான். அந்த வாசல் மாலைவரை பூட்டப்படாமல் இருக்கும்.
RCTA   இந்நாட்களில் தலைவன் வெளிவாயில் மண்டபத்தின் வழியாய் உள்ளே நுழைந்து வாயிற்படி அருகில் நிற்பான். அப்பொழுது அர்ச்சகர்கள் அவனுடைய தகனப் பலியையும் சமாதானப் பலியையும் செலுத்துவார்கள்; அவனோ வாயிலருகிலேயே நின்று வழிபாடு செய்து விட்டுப் போவான்; அவ்வாயில் அன்று மாலை வரை திறந்தே கிடக்கும்.
ECTA   தலைவன் வெளியிலிருந்து நுழைவாயிலின் முகமண்டபம் வழியாய் உள்நுழைந்து வாயில் நிலையருகே நிற்க வேண்டும். அவனுடைய எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் குருக்கள் நிறைவேற்ற வேண்டும். அவன் வாயிற்படியருகே நின்று வழிபாடு செய்துவிட்டுப் போகவேண்டும். ஆனால் வாயிலோ மாலைவரை மூடப்படாதிருக்க வேண்டும்.