Bible Language

Judges 11:2 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   கிலெயாத்தின் மனைவியும் அவனுக்குக் குமாரர்களைப் பெற்றாள்; அவன் மனைவி பெற்ற குமாரர் பெரியவர்களானபின்பு, அவர்கள் யெப்தாவை நோக்கி: உனக்கு எங்கள் தகப்பன் வீட்டிலே சுதந்தரம் இல்லை; நீ அந்நிய ஸ்திரீயின் மகன் என்று சொல்லி அவனைத் துரத்தினார்கள்.
IRVTA   கிலெயாத்தின் மனைவியும் அவனுக்குக் மகன்களைப் பெற்றாள்; அவனுடைய மனைவி பெற்ற மகன்கள் பெரியவர்களானபின்பு, அவர்கள் யெப்தாவை நோக்கி: உனக்கு எங்களுடைய தகப்பன் வீட்டிலே சொத்து இல்லை; நீ அந்நிய பெண்ணின் மகன் என்று சொல்லி அவனைத் துரத்தினார்கள்.
ERVTA   கிலேயாத்தின் மனைவிக்குப் பல மகன்கள் இருந்தனர். அவர்கள் வளர்ந்தபோது யெப்தாவை விரும்பவில்லை. அவனது சொந்த ஊரைவிட்டுச் செல்லுமாறு அம்மகன்கள் யெப்தாவைக் கட்டாயப்படுத்தினார்கள். அவர்கள் அவனை நோக்கி, "நீ நம் தந்தையின் சொத்தில் எதையும் பெறமாட்டாய். நீ வேறொரு பெண்ணின் மகன்" என்றனர்.
RCTA   காலாத்துக்கு ஒரு மனைவி இருந்தாள். அவள் மூலம் அவனுக்குப் புதல்வர் இருந்தனர். இவர்கள் வளர்ந்த பின் ஜெப்தேயை நோக்கி, "நீ வேறொரு தாய்க்குப் பிறந்தவன்; தந்தை வீட்டில் உனக்கு உரிமை இல்லை" என்று கூறி அவனைத் துரத்தி விட்டனர்.
ECTA   கிலாயாதின் மனைவியும் அவருக்குப் புதல்வரைப் பெற்றெடுத்தாள். அம்மனைவியின் புதல்வர் பெரியவர்களானதும் இப்தாவைத் துரத்திவிட்டனர். அவர்கள் அவரிடம் "எங்கள் தந்தையின் வீட்டில் உனக்குப் பங்கு இல்லை. ஏனெனில் நீ வேறொரு பெண்ணின் மகன் என்று கூறினர்.