Bible Language

Ecclesiastes 6:3 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   ஒருவன் நூறு பிள்ளைகளைப் பெற்று, அநேகம் வருஷம் ஜீவித்து, தீர்க்காயுசை அடைந்திருந்தாலும், அவன் ஆத்துமா அந்தச் செல்வத்தால் திருப்தியடையாமலும், அவனுக்குப் பிரேதக்கல்லறை முதலாய் இல்லாமலும் போகுமானால், அவனைப்பாக்கிலும் கருவழிந்த பிண்டம் வாசி என்கிறேன்.
IRVTA   ஒருவன் நூறு பிள்ளைகளைப் பெற்று, அநேகம் வருடங்கள் வாழ்ந்து, தீர்க்காயுசை அடைந்திருந்தாலும், அவனுடைய ஆத்துமா அந்தச் செல்வத்தால் திருப்தியடையாமலும், அவனுக்குப் பிரேதக்கல்லறை முதலாக இல்லாமலும் போனால், அவனைவிட கரு சிதைந்த பிண்டமே சிறப்பானது என்கிறேன்.
ERVTA   ஒருவன் நீண்டகாலம் வாழலாம். அவனுக்கு 100 பிள்ளைகள் இருக்கலாம். ஆனால், அவன் நல்லவற்றில் திருப்தி அடையாவிட்டால், அவன் மரித்தப் பிறகு அவனை எவரும் நினைவில் வைத்துக்கொள்ளாவிட்டால், அவனைவிட பிறக்கும் முன்பே மரித்துப்போகும் குழந்தை சிறந்தது என்று என்னால் சொல்ல முடியும்.
RCTA   ஒருவன் நூறு பிள்ளைகளைப் பெற்றானாம்; பல்லாண்டு வாழ்ந்து கிழவன் ஆனானாம். ஆனால், அவன் ஆன்மா அவனுக்கு உண்டான நன்மைகளைப் பயன்படுத்தியதுமில்லை; அவன் இறந்தபோது அவனுக்கு இறுதிக் கடன் செய்ய அன்னியர் முதலாய் இல்லை. அவனைக்காட்டிலும் கருச்சிதைந்த பிண்டமே பாக்கியசாலியென்று நான் ஐயமின்றிச் சொல்கிறோன்.
ECTA   ஒருவருக்கு நூறு பிள்ளைகள் இருக்கலாம். அவர் நீண்ட ஆயுளுடனும் வாழலாம். அவர் நெடுங்காலம் உயிரோடிருந்தும், தமக்குள்ள செல்வத்தால் இன்பம் அடையாமலும், இறந்தபின் அடக்கம் செய்யப்படாமலும் மறைவாரானால், அவரைவிடக் கருச்சிதைந்த பிண்டமே மேல் என்கிறேன்.