Bible Language

Exodus 33:7 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   மோசே கூடாரத்தைப் பெயர்த்து, அதைப் பாளயத்துக்குப் புறம்பே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக்கூடாரம் என்று பேரிட்டான். கர்த்தரைத் தேடும் யாவரும் பாளயத்துக்குப் புறம்பான ஆசரிப்புக் கூடாரத்துக்குப் போவார்கள்.
IRVTA   {ஆசரிப்புக்கூடாரம்} PS மோசே கூடாரத்தை பெயர்த்து, அதை முகாமிற்கு வெளியே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக்கூடாரம் என்று பெயரிட்டான். யெகோவாவைத் தேடும் யாவரும் முகாமிற்குத் தூரமான கூடாரத்திற்குப் போவார்கள்.
ERVTA   பாளையத்துக்கு வெளியே சற்று தூரத்தில் மோசே ஒரு கூடாரத்தை எடுத்துச் செல்வது வழக்கம். மோசே அதை "ஆசரிப்புக் கூடாரம்" என்று அழைத்தான். கர்த்தரிடமிருந்து எதையாவது கேட்டறிய விரும்புகிறவன் பாளையத்துக்கு வெளியே ஆசாரிப்புக் கூடாரத்திற்குச் செல்வான்.
RCTA   பின்னர் மோயீசன் ஆசாரக் கூடாரத்தைப் பெயர்த்து, அதைப் பாளையத்துக்கு வெளியே தூரத்தில் நிறுவினார்; அதன் பெயரை உடன்படிக்கைக் கூடாரம் என்று அழைத்தார். அது முதல் யாதொரு வழக்கு உண்டானால், மக்களெல்லாம் பாளையத்துக்கு வெளியே உடன்படிக்கைக் கூடாரத்துக்குப் போவார்கள்.
ECTA   மோசே பாளையத்துக்கு வெளியே கூடாரத்தைத் தூக்கிச் செல்வதும் பாளையத்திற்கு வெகு தூரத்தில் கூடாரம் அடிப்பதும் வழக்கம். அதற்கு அவர் சந்திப்புக் கூடாரம் என்று பெயரிட்டார். ஆண்டவரைத் தேடும் யாவரும் பாளையத்துக்கு வெளியேயுள்ள சந்திப்புக் கூடாரத்திற்குச் செல்வர்.