Bible Language

Ezekiel 30:9 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   நிர்விசாரமான எத்தியோப்பியரைத் தத்தளிக்கப்பண்ண அந்நாளிலே என் கட்டளையினால் தூதாட்கள் கப்பல்களிலே போவார்கள்; அப்பொழுது எகிப்தின் நாளிலே உண்டானதுபோல அவர்களுக்குள்ளே மகா வேதனை உண்டாயிருக்கும்; இதோ, அது வருகிறது.
IRVTA   இருமாப்புள்ள எத்தியோப்பியரைத் தத்தளிக்கச்செய்து அந்த நாளிலே என்னுடைய கட்டளையினால் தூதுவர்கள் கப்பல்களிலே போவார்கள்; அப்பொழுது எகிப்தின் நாளிலே உண்டானதுபோல அவர்களுக்குள்ளே மகா வேதனை உண்டாயிருக்கும்; இதோ, அது வருகிறது.
ERVTA   ‘அந்த நேரத்தில், நான் தூதுவர்களை அனுப்புவேன். அவர்கள் கெட்ட செய்தியோடு எத்தியோப்பியாவிற்குக் கப்பலில் போவார்கள். எத்தியோப்பியா இப்போது பாதுகாப்பை உணர்கிறது. எகிப்து தண்டிக்கப்படும்போது, எத்தியோப்பியர்கள் பயத்தினால் நடுங்குவார்கள்! அந்த நேரம் வருகிறது.
RCTA   அந்நாளில் எத்தியோப்பியர்களுடைய இறுமாப்பை அழிக்க நாம் தூதர்களை அனுப்புவோம்; அப்பொழுது அவர்கள், எகிப்தின் அழிவு நாள் வந்தது, தங்களுக்கும் அது வந்தே தீரும்" எனக் கண்டு அஞ்சித் திகைப்பார்கள்.
ECTA   அந்நாளில் கூசு மக்களின் மனவுறுதியைக் குலைத்த நான் கப்பலில் தூதரை அனுப்புவேன்; எகிப்தின்; அழிவு நாளில் திகில் அவர்களை ஆட்கொள்ளும்; ஏனெனில் அந்நாள் உண்மையிலேயே வரப்போகின்றது.