Bible Language

Ezekiel 46:9 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   தேசத்தின் ஜனங்கள் குறிக்கப்பட்ட நாட்களில் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது, ஆராதனை செய்கிறதற்காக வடக்கு வாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் தெற்கு வாசல்வழியாய்ப் புறப்படவும், தெற்கு வாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் வடக்கு வாசல்வழியாயப் புறப்படவும்கடவன்; தான் பிரவேசித்த வாசல்வழியாய்த் திரும்பிப்போகாமல், தனக்கு எதிரான வழியாய்ப் புறப்பட்டுப்போவானாக.
IRVTA   தேசத்தின் மக்கள் குறிக்கப்பட்ட நாட்களில் யெகோவாவுடைய சந்நிதியில் வரும்போது, ஆராதனை செய்கிறதற்காக வடக்கு வாசல்வழியாக உள்ளே நுழைந்தவன் தெற்கு வாசல்வழியாகப் புறப்படவும், தெற்கு வாசல்வழியாக உள்ளே நுழைந்தவன் வடக்கு வாசல்வழியாகப் புறப்படவேண்டும்; தான் நுழைந்த வாசல்வழியாகத் திரும்பிப்போகாமல், தனக்கு எதிரான வழியாகப் புறப்பட்டுப்போவானாக.
ERVTA   பொது ஜனங்கள் சிறப்புப் பண்டிகை நாட்களில் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது, தொழுகை செய்ய வடக்கு வாசல் வழியாக வந்து தெற்கு வாசல் வழியாகப் போக வேண்டும். அவன் தான் நுழைந்த வாசல் வழியாக திரும்பிப் போகாமல் தனக்கு எதிரான வழியாய்ப் புறப்பட்டுப் போக வேண்டும்.
RCTA   பொதுமக்கள் திருநாட்களின் காலத்தில் ஆண்டவருடைய திருமுன்னிலைக்கு வருகிற போது, வழிபாடு செய்ய வடக்கு வாயில் வழியாய் உள்ளே வந்தவன் தெற்கு வாயில் வழியாய் வெளியே போக வேண்டும்; தெற்கு வாயில் வழியாய் உள்ளே வந்தவன் வடக்கு வாயில் வழியாய் வெளியே போக வேண்டும்; தான் உள்ளே வந்த வாயில் வழியாய்த் திரும்பிப் போகாமல், அதற்கு எதிர்ப்பக்கத்தில் இருக்கும் வாயில் வழியாய்த் தான் வெளியேற வேண்டும்.
ECTA   குறிப்பிட்ட நாள்களில் நாட்டு மக்கள் ஆண்டவர் திருமுன் வருகையில், வடக்கு வாயில் வழியாய் வழிபாடு செய்ய வருவர். தெற்கு வாயில் வழியாய் வெளிச்செல்ல வேண்டும். தெற்கு வாயில் வழியாய் நுழைபவர் வடக்கு வாயில் வழியாய் வெளிச்செல்ல வேண்டும். யாரும் தான் உள் நுழைந்த வாயில் வழியாய்த் திரும்பக் கூடாது. ஆனால் ஒவ்வோருவரும் எதிர்வாயில் வழியாய் வெளிச்செல்ல வேண்டும்.