Bible Language

Ezekiel 48:11 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   இஸ்ரவேல் புத்திரர் வழிதப்பிப்போகையில், லேவியர் வழிதப்பிப்போனதுபோல வழிதப்பிப்போகாமல், என் காவலைக் காத்துக்கொண்ட சாதோக்கின் புத்திரராகிய பரிசுத்தமாக்கப்பட்ட ஆசாரியர்களுக்கு அது உரியதாகும்.
IRVTA   இஸ்ரவேல் மக்கள் வழிதப்பிப்போகும்போது, லேவியர்கள் வழிதப்பிப்போனதுபோல வழிதப்பிப்போகாமல், என்னுடைய காவலைக் காத்துக்கொண்ட சாதோக்கியர்களாகிய பரிசுத்தமாக்கப்பட்ட ஆசாரியர்களுக்கு அது உரியதாகும்.
ERVTA   இப்பகுதி சாதோக்கின் சந்ததிகளான ஆசாரியர்களுக்கு உரியது. இவர்கள் எனது பரிசுத்தமான ஆசாரியர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஏனென்றால், இஸ்ரவேலின் ஜனங்கள் வழி தப்பிப்போகையில், லேவியர் வழி தப்பிப்போனது போன்று சாதோக்கின் குடும்பம் போகவில்லை.
RCTA   இஸ்ராயேல் மக்கள் வழிதவறி நடந்தபோதும், லேவியர் கூட நெறி தவறி நடந்த போதும், வழி தவறாமல் நம்முடைய நீதி முறைமைகளைக் கடைப்பிடித்திருந்த அர்ச்சிக்கப்பட்ட குருக்களாகிய சாதோக்கின் மக்களுக்கு இந்தப் பகுதி உரியதாகும்,
ECTA   அந்த இடம் இஸ்ரயேலருடன் சேர்ந்து என்னைவிட்டு விலகிச் சென்ற லேவியரைப் போல் அல்லாமல் எனக்குப் பணிபுரிவதில் கருத்தாயிருந்த சாதோக்கியராகிய புனிதப்படுத்தப்பட்ட குருக்களுக்கு உரியதாய் இருக்கும்.