Bible Language

Genesis 31:52 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   தீங்குசெய்ய நான் இந்தக் குவியலைக் கடந்து உன்னிடத்துக்கு வராதபடிக்கும், நீ இந்தக் குவியலையும் இந்தத் தூணையும் கடந்து என்னிடத்துக்கு வராதபடிக்கும் இந்தக் குவியலும் சாட்சி, இந்தத் தூணும் சாட்சி.
IRVTA   தீங்குசெய்ய நான் இந்தக் குவியலைக் கடந்து உன்னிடத்திற்கு வராமலிருக்கவும், நீ இந்தக் குவியலையும் இந்தத் தூணையும் கடந்து என்னிடத்திற்கு வராமலிருக்கவும் இந்தக் குவியலும் சாட்சி, இந்தத் தூணும் சாட்சி.
ERVTA   நம் இருவருக்கும் இடையிலான ஒப்பந்தத்தை என்றென்றும் ஞாபகப்படுத்தும் இந்தக் கல்லைத் தாண்டி வந்து நான் உன்னோடு போரிடமாட்டேன். நீயும் இதைக் கடந்து வந்து என்னோடு போரிடக் கூடாது.
RCTA   ஆம், (உனக்குத் தீமை செய்ய) நான் அவற்றைக் கடந்து போவேனாகிலும், நீ எனக்குப் பொல்லாப்புச் செய்ய அவற்றைத் தாண்டி வருவாயாகிலும், இம்மேடையும் இந்தத் தூணும் சாட்சியாய் இருக்கும்.
ECTA   நான் இந்தக் குவியலைக் கடந்து வந்து உமக்குத் தீங்கிழைக்கமாட்டேன் என்பதற்கும் நீர் இந்தக் குவியலையும் நினைவுத் தூணையும் கடந்து வந்து எனக்குத் தீங்கிழைக்க மாட்டீர் என்பதற்கும் இந்தக் குவியல் சான்று; இந்த நினைவுத் தூண் சான்று.