Bible Language

Genesis 6:18 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   ஆனாலும் உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்; நீயும், உன்னோடேகூட உன் குமாரரும், உன் மனைவியும், உன் குமாரரின் மனைவிகளும், பேழைக்குள் பிரவேசியுங்கள்.
IRVTA   ஆனாலும் உன்னோடு என்னுடைய உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்; நீயும், உன்னோடுகூட உன்னுடைய மகன்களும், உன்னுடைய மனைவியும், உன்னுடைய மகன்களின் மனைவிகளும், கப்பலுக்குள் செல்லுங்கள்.
ERVTA   ஆனால் நான் உன்னோடு ஒரு சிறப்பான உடன்படிக்கையைச் செய்கிறேன். நீயும் உன் மனைவியும் உன் மகன்களும், மகன்களின் மனைவிமார்களும் கப்பலுக்குள் போய் விடுங்கள்.
RCTA   ஆனால் உன்னோடு நம்முடைய உடன்படிக்கையை நிலை நிறுத்துவோம். பெட்டகத்துள் நீயும் புகுவாய்; உன்னோடு உன் புதல்வர்களும், உன் மனைவியும், உன் புதல்வர்களின் மனைவியரும் நுழைவார்கள்.
ECTA   உன்னுடனோ, என் உடன்படிக்கையை நிலைநாட்டுவேன். உன் புதல்வர், உன் மனைவி, உன் புதல்வரின் மனைவியர் ஆகியோருடன் நீ பேழைக்குள் செல்.