Bible Language

Jeremiah 30:16 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   ஆதலால் உன்னைப் பட்சிக்கிறவர்கள் யாவரும் பட்சிக்கப்படுவார்கள்; உன் சத்துருக்களெல்லாரும் சிறைப்பட்டுப்போவார்கள்; உன்னைச் சூறையாடுகிறவர்கள் சூறையாடப்படுவார்கள்; உன்னைக் கொள்ளையிடுகிற அனைவரையும் கொள்ளைக்கு ஒப்புக்கொடுப்பேன்.
IRVTA   ஆதலால் உன்னை அழிக்கிறவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள்; உன் எதிரிகளெல்லோரும் சிறைப்பட்டுப்போவார்கள்; உன்னைச் சூறையாடுகிறவர்கள் சூறையாடப்படுவார்கள்; உன்னைக் கொள்ளையிடுகிற அனைவரையும் கொள்ளைக்கு ஒப்புக்கொடுப்பேன்.
ERVTA   அந்நாடுகள் உங்களை அழித்தனர். ஆனால் இப்பொழுது அந்நாடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இஸ்ரவேல் மற்றும் யூதாவே, உங்கள் பகைவர்கள் கைதிகளாவார்கள். அந்த ஜனங்கள் உங்களிடமிருந்து திருடினார்கள். ஆனால் அவர்களிடமிருந்து மற்றவர்கள் திருடுவார்கள். அந்த ஜனங்கள் போரில் உங்களிடமிருந்து பொருட்களை எடுத்துக் கொண்டனர். ஆனால் போரில் பிறர் அவர்களை கொள்ளையடிப்பார்கள்.
RCTA   ஆதலால் உன்னை விழுங்குகிறவர்கள் விழுங்கப்படுவார்கள்; உன் பகைவர் அனைவரும் அடிமைகளாய் அழைத்துப் போகப் படுவார்கள்; உன்னை அழிக்கிறவர்கள் அழிக்கப்படுவார்கள்; உன்னைக் கொள்ளையடிப்பவர்களை நாம் கொள்ளைப் பொருளாக்குவோம்.
ECTA   ஆயினும், உன்னை விழுங்குவோர் எல்லாரும் விழுங்கப்படுவர்; உன் பகைவர் எல்லாரும் ஒருவர் விடாமல் நாடுகடத்தப்படுவர்; உன்னைக் கொள்ளையடிப்போர் அனைவரும், கொள்ளையடிக்கப்படுவர்; உன்னைச் சூறையாடுவோர் அனைவரும், நான் கையளிக்க, சூறையாடப்படுவர்.