Bible Language

Joel 2:2 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; விடியற்கால வெளுப்பு பர்வதங்களின்மேல் பரவுகிறதுபோல ஏராளமான பலத்த ஒரு ஜாதி தீவிரமாக வந்து பரவும்; அப்படிப்பட்டது முன் ஒரு காலத்திலும் உண்டானதுமில்லை, இனித் தலைமுறை தலைமுறையாக வரும் வருஷங்களிலும் உண்டாவதுமில்லை.
IRVTA   அது இருளும் காரிருளுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; விடியற்கால வெளுப்பு மலைகளின்மேல் பரவுகிறதுபோல ஏராளமான பலத்த ஒரு மக்கள்கூட்டம் தீவிரமாக வந்து பரவும்; அப்படிப்பட்டது முன்பு ஒரு காலத்திலும் உண்டாகவுமில்லை, இனித் தலைமுறை தலைமுறையாக இனிவரும் வருடங்களிலும் உண்டாவதுமில்லை.
ERVTA   அது இருண்ட அந்தகாரமான நாளாக இருக்கும். அது இருளும் மந்தாரமுமான நாளாக இருக்கும். சூரிய உதயத்தின்போது நீங்கள் மலை முழுவதும் படை பரவியிருப்பதைப் பார்ப்பீர்கள். அப்படை சிறந்ததாகவும் வல்லமையுடையதாகவும் இருக்கும். இதற்கு முன்னால் எதுவும் இதுபோல் இருந்ததில்லை. இதற்கு பிறகு எதுவும் இதுபோல் இருப்பதில்லை.
RCTA   அதுவோ இருளும் காரிருளும் கவிந்த நாள், கார்முகிலும் மந்தாரமும் சூழ்ந்த நாள்; காலை வெயில் மலை மீது நொடிப் பொழுதில் பரவுவது போல் ஆற்றல் மிக்க பெருங் கூட்டம் வருகின்றது. பண்டு முதல் இதற்கொப்பாய்க் கண்டதுமில்லை, ஊழிக்காலம் வரை இனிக் காணப்போவதுமில்லை.
ECTA   அதுவோ இருளும் காரிருளும் கவிந்த நாள்; மப்பும் மந்தாரமும் சூழ்ந்த நாள்; விடியற்காலை ஒளி மலைகள்மேல் பரவுவதுபோல் ஆற்றல்மிகு, வெட்டுக்கிளிகளின் பெருங்கூட்டம் வருகின்றது; இதுபோன்று என்றுமே நிகழ்ந்ததில்லை; இனிமேல் தலைமுறை தலைமுறைக்கும் நிகழப்போவதுமில்லை.