Bible Language

John 18:25 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   சீமோன்பேதுரு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது சிலர் அவனை நோக்கி: நீயும் அவனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றார்கள். அவன்: நான் அல்ல என்று மறுதலித்தான்.
IRVTA   {பேதுருவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் மறுதலிப்பு} PS சீமோன்பேதுரு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது சிலர் அவனைப் பார்த்து: நீயும் அவனுடைய சீடர்களில் ஒருவனல்லவா என்றார்கள். அவன்: நான் இல்லை என்று மறுதலித்தான்.
ERVTA   சீமோன் பேதுரு நெருப்பருகில் நின்று குளிர் காய்ந்து கொண்டிருந்தான். அப்பொழுது அருகில் இருந்தவர்கள் அந்த மனிதனின் சீஷர்களுள் நீயும் ஒருவன்தானே? என்று கேட்டார்கள். பேதுரு அதனை மறுத்தான். அவன், இல்லை. நான் அல்ல என்றான்.
RCTA   சீமோன் இராயப்பர் அங்கு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தார். அங்கிருந்தவர்கள் அவரைப் பார்த்து, "நீயும் அவனுடைய சீடர்களுள் ஒருவனன்றோ ?" என்று கேட்டார்கள். அவர், "நான் அல்லேன்" என்று மறுத்தார்.
ECTA   சீமோன் பேதுரு அங்கு நின்று குளிர் காய்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரிடம், "நீயும் அவனுடைய சீடர்களுள் ஒருவன் தானே" என்று கேட்டனர். அவர் "இல்லை" என்று மறுதலித்தார்.