Bible Language

John 19:7 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   யூதர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே இவன் சாகவேண்டும் என்றார்கள்.
IRVTA   யூதர்கள் அவனுக்கு மறுமொழியாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணம் உண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னபடியால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே இவன் மரிக்க வேண்டும் என்றார்கள்.
ERVTA   யூதர்களோ, எங்களுக்கென்று ஒரு சட்டம் உண்டு. அதன்படி இவன் சாகவேண்டும். ஏனென்றால் அவன் தன்னை தேவனின் குமாரன் என்று கூறியிருக்கிறான் என்றனர்.
RCTA   அதற்கு யூதர், "எங்களுக்குச் சட்டம் ஒன்று உண்டு; அச்சட்டத்தின்படி இவன் சாகவேண்டும். ஏனெனில், தன்னைக் கடவுளின் மகன் ஆக்கிக்கொண்டான்" என்றனர்.
ECTA   யூதர்கள் அவரைப் பார்த்து, "எங்களுக்கு ஒரு சட்டம் உண்டு. அச்சட்டத்தின்படி இவன் சாகவேண்டும். ஏனெனில் இவன் தன்னையே இறைமகன் என உரிமைகொண்டாடுகிறான்" என்றனர்.