Bible Language

Leviticus 20:24 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   நீங்கள் அவர்கள் தேசத்தைச் சுதந்தரிப்பீர்கள் என்று உங்களோடே சொன்னேன்; பாலும் தேனும் ஒடுகிற அந்த தேசத்தை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்; உங்களை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்த உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே.
IRVTA   “நீங்கள் அவர்கள் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வீர்கள் என்று உங்களுடன் சொன்னேன்; பாலும் தேனும் ஒடுகிற * செழிப்பான தேசம் அந்த தேசத்தை உங்களுக்குச் சொந்தமாகக் கொடுப்பேன்; உங்களை மற்ற மக்களைவிட்டுப் பிரித்தெடுத்த உங்கள் தேவனாகிய யெகோவா நானே.
ERVTA   "அவர்களின் நாட்டை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள் என்று நான் கூறியிருக்கிறேன். அவர்களின் நாட்டை உங்களுக்குக் கொடுப்பேன். இது உங்கள் நாடாகும். அது நன்மைகள் நிரம்பிய நாடாக இருக்கும். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்! "நான் உங்களை என் சிறப்புக்குரிய ஜனங்களாக அழைத்திருக்கிறேன். மற்றவர்களைவிட உங்களை வித்தியாசமாக நடத்தியிருக்கிறேன்.
RCTA   நாம் உங்களுக்கு உடைமையாகக் கொடுக்கப் போகிற அவர்களுடைய நாட்டை நீங்கள் உரிமையாக்கிக் கொள்ளுங்களென்று நாம் உங்களுக்குச் சொல்கிறோம். அந்நாடு பாலும் தேனும் பொழியும் நாடு. உங்கள் கடவுளாகிய நாம் உங்களை மற்ற மக்களினின்று பிரித்தெடுத்தோம்.
ECTA   அவர்களின் நாட்டை நீங்கள் உரிமையாக்கிக் கொள்வீர்கள் என்று கூறினேன். பாலும் தேனும் ஓடும் அந்த நாட்டை உங்களுக்கு உடைமையாக்கினேன். உங்களை மக்களினங்களைவிட்டுப் பிரித்தெடுத்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரே நான்!