Bible Language

1 Chronicles 4:42 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   சிமியோனின் புத்திரராகிய இவர்களில் ஐந்நூறு மனுஷரும், அவர்கள் தலைமைக்காரராகிய இஷியின் குமாரரான பெலத்தியாவும், நெகரியாவும், ரெப்பாயாவும், ஊசியேலும், சேயீர் மலைத்தேசத்திற்குப் போய்,
IRVTA   சிமியோனின் கோத்திரத்தார்களாகிய இவர்களில் ஐந்நூறு மனிதர்களும், அவர்களுடைய தலைவர்களாகிய இஷியின் மகன்களான பெலத்தியாவும், நெகரியாவும், ரெப்பாயாவும், ஊசியேலும், சேயீர் மலைத்தேசத்திற்குப் போய்,
ERVTA   சிமியோனின் கோத்திரத்திலிருந்து 500 ஜனங்கள் சேயீர் மலைநாட்டுக்குச் சென்றனர். இஷியின் மகன்கள் இவர்களை வழிநடத்தினர். அவர்கள், பெலத்தியா, நெகரியா, ரெப்பாயா, ஊசியேல் ஆகியோராகும். சிமியோர் ஜனங்கள் அங்கே வாழ்ந்தவர்களோடு சண்டையிட்டனர்.
RCTA   சிமேயோனின் புதல்வராகிய இவர்களில் ஐந்நூறு வீரர் ஏசியின் புதல்வர் பல்தியாஸ், நாரியாஸ், ரப்பையாஸ், ஓசியேல் என்பவர்களைத் தலைவர்களாக கொண்டு, செயீர் மலைக்குச் சென்றனர்.
ECTA   சிமியோன் புதல்வர்களாகிய அவர்களுள் ஐந்நூறு பேர், இசீயின் புதல்வர்களான பெலத்தியா, நெகரியா, இரபாயா, உசியேல் ஆகியோரின் தலைமையில் சேயிர் மலைக்குச் சென்றனர்.