Bible Language

1 Kings 10:19 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அந்தச் சிங்காசனத்திற்கு ஆறு படிகள் இருந்தது; சிங்காசனத்தின் தலைப்பு பின்னாக வளைவாயிருந்தது; உட்காரும் இடத்திற்கு இருபுறமும் கைச்சாய்மானங்கள் இருந்தது; இரண்டு சிங்கங்கள் கைச்சாய்மானங்கள் அருகே நின்றது.
IRVTA   அந்தச் சிங்காசனத்திற்கு ஆறு படிகள் இருந்தது; சிங்காசனத்தின் தலைப்பு பின்னாக வளைவாக இருந்தது; உட்காரும் இடத்திற்கு இருபுறமும் கைப்பிடிகள் இருந்தது; இரண்டு சிங்கங்கள் கைப்பிடிகளின் அருகே நின்றது.
ERVTA   அதில் ஏறிச்செல்ல 6 படிகள் இருந்தன. அதன் பின் பகுதியின் உச்சியில் வட்டமாக இருந்தது. இரு பக்கங்களிலும் கை வைப்பதற்கான பிடிமானங்கள் இருந்தன.
RCTA   அவ்வரியணைக்கு ஆறுபடிகள் இருந்தன. அரியணையின் மேற்பாகம் பின்னால் வளைவாய் இருந்தது. உட்காருமிடத்திற்கு இருபுறமும் கைபிடிகள் இருந்தன. இரு சிங்கங்கள் அவற்றின் அருகே நின்றன.
ECTA   அவ்வரியணைக்கு ஆறு படிகள் இருந்தன. அரியணையின் பின்புற உச்சி காளையின் தலை உருவம் கொண்டிருந்தது. இருக்கையின் இரு புறமும் கைப்பிடிகள் இருந்தன. அவற்றின் அருகே இரு சிங்கங்கள் வடிவங்கள் நின்றன.