Bible Language

1 Samuel 14:24 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   இஸ்ரவேலர் அன்றையதினம் மிகுந்த வருத்தம் அடைந்தார்கள்; நான் என் சத்தருக்கள் கையிலே பழிவாங்கவேண்டும், சாயங்காலமட்டும் பொறுக்காமல் எவன் போஜனம் செய்கிறானோ, அவன் சபிக்கப்பட்டவன் என்று சவுல் ஜனங்களுக்கு ஆணையிட்டுச் சொல்லியிருந்தபடியால், ஜனங்களில் ஒருவரும் எவ்வளவேனும் போஜனம்பண்ணாதிருந்தார்கள்.
IRVTA   {சவுல் ஆணையிடுதல்} PS இஸ்ரவேலர்கள் அன்றையதினம் மிகுந்த வருத்தம் அடைந்தார்கள்; நான் என் எதிரிகளை பழிவாங்கவேண்டும், மாலைவரைக்கும் பொறுக்காமல் எவன் சாப்பிடுகிறானோ, அவன் சபிக்கப்பட்டவன் என்று சவுல் மக்களுக்கு ஆணையிட்டுச் சொல்லியிருந்தபடியால், மக்களில் ஒருவரும் கொஞ்சம்கூட சாப்பிடாதிருந்தார்கள்.
ERVTA   அன்று சவுல் ஒரு பெரிய தவறு செய்தான். இஸ்ரவேலர் களைப்பாகவும் பசியோடும் இருந்தனர். அவர்களிடம், "மாலைக்கு முன் யாராவது உண்டாலோ, பகைவரை வெல்லுமுன் யாராவது உண்டாலோ தண்டிக்கப்படுவார்கள்!" என்று ஆணையிட்டிருந்தான். எனவே யாரும் அன்று உண்ணாமல் இருந்தனர்.
RCTA   இஸ்ராயேல் மனிதர்கள் அன்று ஒன்றாய்ச் சேர்ந்தார்கள். அப்பொழுது சவுல் மக்களைப் பார்த்து, "நான் என் எதிரிகளின்மீது பழி வாங்கப் போகிறேன். மாலை மட்டும் எவன் சாப்பிடுவானோ அவன் சபிக்கப்பட்டவன்" என்று ஆணையிட்டுச் சொன்னார். அன்று மக்களில் ஒருவரும் சாப்பிடவில்லை.
ECTA   இஸ்ரயேல் மக்கள் அன்று சோர்வுற்றனர். ஏனெனில் சவுல் அவர்களை நோக்கி, "நான் என் எதிரிகளை பழிவாங்க வேண்டும். ஆகவே மாலைக்குள் யாராவது உணவு கொண்டால் அவன் சபிக்கப்படுவான்" என்று ஆணையிட்டுக் கூறினார். மக்களில் எவரும் அன்று ஏதும் உண்ணவில்லை.