Bible Language

2 Samuel 4 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அப்னேர் எப்ரோனிலே செத்துப்போனதைச் சவுலின் குமாரன் கேட்டபோது, அவன் கைகள் திடனற்றுப்போயிற்று; இஸ்ரவேலரெல்லாரும் கலங்கினார்கள்.
IRVTA   {இஸ்போசேத் கொலை செய்யப்படுதல்} PS அப்னேர் எப்ரோனிலே இறந்துபோனதைச் சவுலின் மகன் கேட்டபோது, அவனுடைய கைகள் பெலன் இல்லாமல் போனது; இஸ்ரவேலர்கள் அனைவரும் கலங்கினார்கள்.
ERVTA   எப்ரோனில் அப்னேர் மரித்தான் என்பதை சவுலின் மகனான இஸ்போசேத் கேள்விப்பட்டான். இஸ்போசேத்தும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் மிகவும் அச்சம் கொண்டனர்.
RCTA   அப்நேர் எபிரோனில் மடிந்தான் என்று சவுலின் மகன் இசுபோசேத் கேள்வியுற்ற போது, அவன் கைகள் தளர்ந்து போயின. மேலும் இஸ்ராயேலர் அனைவரும் கலங்கினர்.
ECTA   அப்னேர் எபிரோனில் இறந்ததை கேட்டதும் சவுலின் மகன் இஸ்பொசேத்து நிலைகுலைந்தான். அனைத்து இஸ்ரயேலும் கலங்கியது.