Bible Language

2 Chronicles 11:21 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ரெகொபெயாம் தன்னுடைய மனைவிகள் மறுமனையாட்டிகள் எல்லாரிலும், அப்சலோமின் குமாரத்தியாகிய மகாளைச் சிநேகித்தான்; பதினெட்டு மனைவிகளையும் அறுபது மறுமனையாட்டிகளையும் விவாகம்பண்ணி, இருபத்தெட்டுக் குமாரரையும் அறுபது குமாரத்திகளையும் பெற்றான்.
IRVTA   ரெகொபெயாம் தன்னுடைய மனைவிகள் மறுமனையாட்டிகள் எல்லோரிலும், அப்சலோமின் மகளாகிய மாகாளைச் சிநேகித்தான்; பதினெட்டு மனைவிகளையும் அறுபது மறுமனையாட்டிகளையும் திருமணம்செய்து, இருபத்தெட்டு மகன்களையும் அறுபது மகள்களையும் பெற்றான்.
ERVTA   ரெகொபெயாம் தனது மற்ற மனைவியரையும், வேலைக்காரிகளையும் விட மாக்காவைப் பெரிதும் நேசித்தான். அவனுக்கு 18 மனைவியரும், 60 வேலைக்காரிகளும் இருந்தனர். இவனுக்கு 28 மகன்களும், 60 மகள்களும் இருந்தனர்.
RCTA   ரொபோவாம் அப்சலோமின் மகளான இந்த மாக்காலைத் தன் எல்லா மனைவியரையும் வைப்பாட்டிகளையும் விட அதிகமாய் நேசித்து வந்தான். அவன் பதினெட்டு மனைவியரையும், அறுபது வைப்பாட்டிகளையும் மணந்து இருபத்தெட்டுப் புதல்வர்களையும் அறுபது புதல்வியரையும் பெற்றெடுத்தான்.
ECTA   ரெகபெயாம் பதினெட்டு மனைவியரையும் அறுபது வைப்பாட்டியரையும் கொண்டிருந்தான்; இவர்கள் மூலம் இருபத்தெட்டுப் புதல்வரையும் அறுபது புதல்வியரையும் பெற்றான். ஆனால், மற்ற எல்லா மனைவியர், வைப்பாட்டியரையும் விட அப்சலோம் மகள் மாக்காவிடம் அவன் மிகுதியாக அன்பு பாராட்டினான்.