Bible Language

2 Chronicles 29:21 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அப்பொழுது ராஜ்யபாரத்திற்காகவும் பரிசுத்த ஸ்தலத்திற்காகவும் யூதாவுக்காகவும் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும், ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஏழு வெள்ளாட்டுக்கடாக்களையும் பாவநிவாரணபலியாகக் கொண்டுவந்தார்கள்; அவைகளைக் கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் பலியிடுங்கள் என்று அவன் ஆசாரியராகிய ஆரோனின் புத்திரருக்குச் சொன்னான்.
IRVTA   அப்பொழுது அரசாட்சிக்காகவும் பரிசுத்த ஸ்தலத்திற்காகவும் யூதாவுக்காகவும் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும், ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஏழு வெள்ளாட்டுக்கடாக்களையும் பாவநிவாரணபலியாகக் கொண்டுவந்தார்கள்; அவைகளைக் யெகோவாவுடைய பலிபீடத்தின்மேல் பலியிடுங்கள் என்று அவன் ஆசாரியராகிய ஆரோனின் சந்ததியான மகன்களுக்குச் சொன்னான்.
ERVTA   அவர்கள் 7 காளைகளையும், 7 ஆண் ஆட்டுக்கடாக்களையும், 7 ஆட்டுக்குட்டிகளையும் 7 வெள்ளாட்டுக் கடாக்களையும், பாவப்பரிகாரப் பலிக்காகக் கொண்டுவந்தனர். இதன் மூலம் அவர்கள் யூதா அரசாங்கம், பரிசுத்த இடம், யூதா ஜனங்கள் ஆகியோரைப் பரிசுத்தப்படுத்தினார்கள். கர்த்தருடைய பலிபீடத்தில் இவற்றைப் பலியிடுமாறு ஆசாரியர்களுக்கு எசேக்கியா அரசன் கட்டளையிட்டான். இவ்வாசாரியர்கள் ஆரோனின் சந்ததியினர் ஆவார்கள்.
RCTA   அப்பொழுது அவர்கள் எல்லாரும் ஒன்றுகூடிப் பாவப்பரிகாரத்திற்காகவும் நாட்டிற்காகவும் திருவிடத்திற்காகவும் யூதா நாட்டுக்காகவும் பலி செலுத்துமாறு, ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக் கடாக்களையும் ஏழு ஆட்டுக்குட்டிகளையும் ஏழு வெள்ளாட்டுக் கடாக்களையும் கொண்டு வந்தனர். ஆரோனின் புதல்வரான குருக்களை நோக்கி, "இவற்றை ஆண்டவரின் பலிபீடத்தின் மேல் பலியிடுங்கள்" என்று கூறினர்.
ECTA   அரசுக்காகவும், திருத்தலத்துக்காகவும், யூதாவுக்காகவும் பாவம் போக்கும் பலி ஒப்புக்கொடுக்க அவர்கள் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கிடாய்களையும், ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஏழு வெள்ளாட்டுக்குட்டிகளையும் கொண்டு வந்தனர். ஆண்டவருக்கு அவற்றைப் பீடத்தில் பலியிட அரசர் ஆரோனின் புதல்வர்களான குருக்களுக்குக் கட்டளையிட்டார்.