Bible Language

2 Chronicles 35 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அதற்குப் பின்பு யோசியா எருசலேமிலே கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரித்தான்; அவர்கள் முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள்.
IRVTA   {யோசியா பஸ்கா பண்டிகையைக் கொண்டாடுதல்} PS அதற்குப்பின்பு யோசியா எருசலேமிலே யெகோவாவுக்கு பஸ்காவை அனுசரித்தான்; அவர்கள் முதலாம் மாதம் பதினான்காம் தேதியிலே பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள்.
ERVTA   எருசலேமில் கர்த்தருக்கு யோசியா அரசன் பஸ்காவைக் கொண்டாடினான். பஸ்கா ஆட்டுக்குட்டி முதல் மாதத்தில் 14வது நாளன்று கொல்லப்பட்டது.
RCTA   யோசியாஸ் யெருசலேமில் ஆண்டவரின் பாஸ்காத் திருவிழாவைக் கொண்டாடினான். முதன் மாதம் பதினான்காம் நாள் பாஸ்கா பலியிடப்பட்டது.
ECTA   பின்னர், யோசியா எருசலேமில் ஆண்டவருக்காகப் பாஸ்கா விழாவைக் கொண்டாடினார்; முதல் மாதத்தின் பதினான்காம் நாளில் அவர்கள் பாஸ்காப்பலி செலுத்தினர்.