Bible Language

2 Kings 15:25 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஆனாலும் ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா என்னும் அவனுடைய சேர்வைக்காரன் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, கீலேயாத் புத்திரரில் ஐம்பதுபேரைக் கூட்டிக்கொண்டு, அவனையும் அர்கோபையும் ஆரியேயையும் ராஜாவின் வீடாகிய அரமனையிலே சமாரியாவில் வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
IRVTA   ஆனாலும் ரெமலியாவின் மகனாகிய பெக்கா என்னும் அவனுடைய அதிகாரி அவனுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டி, கீலேயாத் மனிதர்களில் ஐம்பதுபேரைக் கூட்டிக்கொண்டு, அவனையும் அர்கோபையும் ஆரியேயையும் ராஜாவின் வீடாகிய அரண்மனையிலே சமாரியாவில் வெட்டிக் கொன்றுபோட்டு, அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
ERVTA   பெக்காகியாவின் படை அதிகாரியாக ரெமலியாவின் மகனான பெக்கா இருந்தான். பெக்கா பெக்காகியாவை, சமாரியா அரசனின் அரண்மனையிலேயே கொன்றுபோட்டான். பெக்காகியாவைக் கொன்றபொழுது பெக்காவிடம் கீலேயாத்தின் 50 ஆட்கள் இருந்தனர். பிறகு அவன் புதிய அரசன் ஆனான்.
RCTA   ரொமேலியாவின் மகனும், படைத்தலைவனுமான பாசே அவனுக்கு எதிராகச் சதி செய்து தன்னோடு இருந்த ஐம்பது காலாத்தியரோடு சமாரியாவிலுள்ள அரண்மனைக் கோபுரத்திற்கு வந்து, அக்கோப், அரியே ஆகியவர்களின் முன் அரசனைக் கொன்றுவிட்டு அவனுக்குப்பின் அரியணை ஏறினான்.
ECTA   இரமலியாவின் மகனும் படைத் தலைவனுமான பெக்கா அவனுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து தன்னோடு இருந்த ஐம்பது கிலயாதியரோடு சமாரியாவிலுள்ள அரண்மனைக் கோட்டைக்குள் புகுந்து அரசனையும், அர்கோபு, அரியே என்பவர்களையும் கொன்று அவனுக்குப் பதிலாக அரசன் ஆனான்.