Bible Language

2 Samuel 19:26 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அதற்கு அவன்: ராஜாவாகிய என் ஆண்டவனே, என் வேலைக்காரன் என்னை மோசம் போக்கினான்; உமது அடியானாகிய நான் முடவனானபடியினால், ஒரு கழுதையின்மேல் சேணம்வைத்து அதின்மேல் ஏறி, ராஜாவோடேகூடப் போகிறேன் என்று அடியேன் சொன்னேன்.
IRVTA   அதற்கு அவன்: ராஜாவான என்னுடைய ஆண்டவனே, என்னுடைய வேலைக்காரன் என்னை மோசம் போக்கினான்; உமது அடியானான நான் முடவனானபடியால், ஒரு கழுதையின்மேல் சேணம்வைத்து அதின்மேல் ஏறி, ராஜாவோடு போகிறேன் என்று அடியேன் சொன்னேன்.
ERVTA   மேவிபோசேத் பதிலாக, "எனது அரசனாகிய ஆண்டவனே, எனது வேலையாள் (சீபா) என்னை ஏமாற்றிவிட்டான். நான் சீபாவிடம்," நான் முடவன் எனவே கழுதையில் ஏற்றி வை. நான் கழுதையின் மேலேறி அரசனோடு போவேன்" என்றேன்.
RCTA   அதற்கு அவன், "என் தலைவராகிய அரசே! என் வேலைக்காரன் என்னை இழிவாகப் பேசினான். உம் அடியானாகிய நான் முடவனானபடியால், 'ஒரு கழுதை மேல் சேணம் போட்டு, நான் அதன் மேல் ஏறி அரசருடன் போகிறேன்' என்று சொல்லியும் அவன் கேட்கவில்லை.
ECTA   அதற்கு என் தலைவராம் அரசரே! என் பணியாளன் என்னை ஏமாற்றி விட்டான். உம் அடியான் கால் ஊனமுற்றிருப்பதால், "நானே என் கழுதைக்குச் சேணமிட்டு அதன் மீது சவாரி செய்து அரசரோடு செல்வேன்" என்று உம் அடியானாகிய நான் கூறினேன்.