Bible Language

2 Samuel 5:8 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   எவன் சாலகத்தின் வழியாய் ஏறி, எபூசியரையும் தாவீதின் ஆத்துமா பகைக்கிற சப்பாணிகளையும், குருடரையும் முறிய அடிக்கிறானோ, அவன் தலைவனாயிருப்பான் என்று தாவீது அன்றையதினம் சொல்லியிருந்தான்; அதனால் குருடனும் சப்பாணியும் வீட்டிலே வரலாகாது என்று சொல்லுகிறதுண்டு.
IRVTA   எவன் கழிவுநீர்க்கால்வாய் வழியாக ஏறி, எபூசியர்களையும் தாவீதின் எதிரிகளான சப்பாணிகளையும், குருடர்களையும் முறியடிக்கிறானோ, அவன் தலைவனாக இருப்பான் என்று தாவீது அன்றையதினம் சொல்லியிருந்தான்; அதனால் குருடனும் சப்பாணியும்; யெகோவாவின் வீட்டிற்குள் * அரண்மனைக்குள் வரக்கூடாது என்று சொல்வதுண்டு.
ERVTA   அந்த நாளில் தாவீது தனது ஆட்களை நோக்கி, "நீங்கள் எபூசியரை வெல்ல விரும்பினால், தண்ணீர் குகை வழியே சென்று ‘முடவரும், குருடரும்’ ஆகிய பகைவரை நெருங்குங்கள் "என்றான். இதனால்தான் மக்கள், "குருடரும் முடவரும் வீட்டினுள் வரமுடியாது" என்பார்கள்.
RCTA   அது தாவீதின் நகராயிற்று. குழாய்க் கால்வாய் வழியாகக் கோட்டையின் மேல் ஏறி எபிசேயரையும் தாவீதை வெறுக்கும் முடவர்களையும் குருடர்களையும் அப்புறப்படுத்துபவனுக்குப் பரிசு கொடுப்பதாகத் தாவீது கூறியிருந்தார். இதன் பொருட்டே, 'குருடனும் முடவனும் ஆலயத்தில் வரக்கூடாது' என்று பழமொழி வழங்கலாயிற்று.
ECTA   அன்று தாவீது, "எபூசியரைத் தாக்குகின்றவர்கள் குடைகால்வாய் வழியே சென்று தாவீது உளமார வெறுக்கும் முடவரையும் பார்வையற்றவரையும் கைப்பற்றட்டும் "என்று கூறினார். ஆகவே, "பார்வையற்றவரும் முடவரும் கோவிலுனுள் நுழையலாகாது "என்று கூறப்பட்டது.