Bible Language

Exodus 3 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின்புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப்மட்டும் வந்தான்.
IRVTA   {மோசேயும் எரிகிற முட்செடியும்} PS மோசே மீதியான் தேசத்தின் ஆசாரியனாக இருந்த தன்னுடைய மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான். அவன் ஆடுகளை வனாந்திரத்தில் தூரமாக நடத்தி, தேவனுடைய மலையாகிய * பரிசுத்த பருவதம் ஓரேப்வரை வந்தான்.
ERVTA   மோசேயின் மாமன் எத்திரோ என்ற பெயருடையவன் ஆவான். (எத்திரோ மீதியானில் ஆசாரியனாக இருந்தான்) எத்தி ரோவின் ஆடுகளை மோசே கவனித்து வந்தான். ஒரு நாள், மோசே ஆடுகளைப் பாலைவனத்தின் மேற்குத் திசைக்கு அழைத்துச் சென்றான். மோசே ஓரேப் (சீனாய்) எனப்படும் தேவனின் மலைக்குப் போனான்.
RCTA   மோயீசன் மதியான் நாட்டுக் குருவாகிய யெத்திரோ என்னும் தன் மாமனின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கையில், மந்தையைப் பாலைநிலத்தின் உட்புறமாய் ஒட்டிக் கொண்டு, தெய்வ (காட்சி) மலை எனப்படும் ஒரேபு மலைவரை வந்தான்.
ECTA   மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்து வந்தார். அவர் அந்த ஆட்டு மந்தையைப் பாலை நிலத்தின் மேற்றிசையாக ஓட்டிக் கொண்டு கடவுளின் மலையாகிய ஓரேபை வந்தடைந்தார்.