Bible Language

Jeremiah 49 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அம்மோன் புத்திரரைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலுக்குக் குமாரர் இல்லையோ? அவனுக்குச் சுதந்தரவாளி இல்லையோ? அவர்கள் ராஜா காத்தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு, அதின் ஜனம் இவன் பட்டணங்களில் குடியிருப்பானேன்?
IRVTA   {அம்மோன் மக்களைக்குறித்த செய்தி} PS அம்மோன் மக்களைக்குறித்துக் * லோத்தின் மக்கள் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலுக்கு மகன்கள் இல்லையோ? அவனுக்குச் சந்ததி இல்லையோ? அவர்கள் ராஜா அவர்கள் ராஜா காத்தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு, அதின் மக்கள் இவன் பட்டணங்களில் ஏன் குடியிருக்கவேண்டும்?
ERVTA   அம்மோனியர்களைப்பற்றி கர்த்தர் இதைக் கூறுகிறார், "அம்மோனிய ஜனங்களே, இஸ்ரவேல் ஜனங்களுக்குப் பிள்ளைகள் இல்லையென்று நினைக்கிறீர்களா? பெற்றோர்கள் மரித்தப்போது நாட்டை சுதந்தரித்துக்கொள்ள பிள்ளைகள் இல்லை என்று நினைக்கிறீர்களா? ஒருவேளை அதற்காகவேதான் மில்காம் காத்தின் நாட்டை எடுத்துக்கொண்டிருக்கலாம்."
RCTA   அம்மோன் மக்களைப் பற்றிய இறைவாக்கு: ஆண்டவர் கூறுகிறார்: "இஸ்ராயேலுக்குப் புதல்வர் இல்லையா? அவனுக்கு வாரிசு இல்லையா? இருந்தால், மெல்கோம், காது நாட்டைக் கைப்பற்றுவானேன்? அவன் மக்கள் அதன் நகரங்களில் குடியேறுவானேன்?
ECTA   அம்மோனியரைக் குறித்து, ஆண்டவர் கூறுவது இதுவே; இஸ்ரயேலுக்குப் இல்லையா? அதற்கு வழிமரபே கிடையாதா? காத்தைக் கைப்பற்றியது ஏன்? அவன் மக்கள் அதன் நகர்களில் குடியிருப்பது ஏன்?