Bible Language

Nehemiah 6:1 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   நான் அலங்கத்தைக் கட்டிமுடித்ததையும், இனி அதிலே திறப்பு ஒன்றுமில்லை என்பதையும், சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியனான கேஷேமும் எங்களுக்குண்டாயிருந்த மற்றப் பகைஞரும் கேள்விப்பட்டபோது,
IRVTA   {கட்டுமானப் பணிக்கு மேலும் எதிர்ப்பு} PS நான் மதிலைக் கட்டிமுடித்ததையும், இனி அதிலே திறப்பு ஒன்றுமில்லை என்பதையும், சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியனான கேஷேமும் எங்களுக்கிருந்த மற்ற எதிரிகளும் கேள்விப்பட்டபோது,
ERVTA   பிறகு சன்பல்லாத், தொபியா, அரபியனான கேஷேமும் மற்றும் எங்களது மற்ற பகைவர்களும் நான் சுவரைக் கட்டிவிட்டேன் என்பதைக் கேள்விப்பட்டனர். நாங்கள் சுவரிலுள்ள அனைத்து துவாரங்களையும் அடைத்தோம். ஆனால் நாங்கள் இன்னும் வாசலுக்குரிய கதவுகளைப் போட்டிருக்கவில்லை.
RCTA   நான் மதில்களைக் கட்டி முடித்து விட்டேன் என்றும் (ஆயினும் வாயில்களில் கதவுகளை இன்னும் அமைக்காதிருந்தேன்), அவற்றில் வெடிப்பு ஒன்றுமில்லை என்றும் சனபல்லாத், தொபியாசு, கொஸ்சேம், அரேபியர் மற்றும் எங்கள் எதிரிகளான அனைவரும் அறிய வந்தனர்.
ECTA   நான் மதிலைக் கட்டி முடித்துவிட்டேன் என்றும், அதில் உடைப்பு ஒன்றுமில்லையென்றும், மேலும் இதுவரை நான் கோட்டை வாயில்களில் கதவுகள் அமைக்கவில்லை என்றும், சன்பலாற்று, தோபியா, கெசேம், அரேபியர், மற்றும் எங்கள் எதிரிகள் அறிய வந்தனர்.