Bible Language

Zephaniah 2:14 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அதின் நடுவில் மந்தைகளும் ஜாதிஜாதியான சகல மிருகங்களும் படுத்துக்கொள்ளும்; அதினுடைய சிகரங்களின்மேல் நாரையும் கோட்டானும் இராத்தங்கும்; பலகணிகளில் கூவுகிற சத்தம் பிறக்கும்; வாசற்படிகளில் பாழ்க்கடிப்பு இருக்கும்; கேதுரு மரங்களின் மச்சைத் திறப்பாக்கிப்போடுவார்.
IRVTA   அதின் நடுவில் மந்தைகளும் வகைவகையான சகல மிருகங்களும் படுத்துக்கொள்ளும்; அதினுடைய மலையுச்சிகளின்மேல் நாரையும் கோட்டானும் இரவில் தங்கும்; பலகணிகளில் கூவுகிற சத்தம் பிறக்கும்; வாசற்படிகளில் வெறுமை இருக்கும்; கேதுருமரத் தளங்களைத் திறப்பாக்கிப்போடுவார்.
ERVTA   பிறகு அந்த அழிந்த நகரத்தில் ஆடுகளும், காட்டு மிருகங்களும் மட்டுமே வாழும். விட்டுப்போன தூண்களின்மேல் கோட்டான்களும், நாரைகளும் இருக்கும். அவர்களின் கூக் குரல் ஜன்னல் வழியாக வந்து கேட்கப்படும். வாசல் படிகளில் காகங்கள் இருக்கும். கருப்பு பறவைகள் காலியான வீடுகளில் இருக்கும்.
RCTA   அதன் நடுவில் கால்நடைகள் கிடைகொள்ளும், காட்டு மிருகங்கள் யாவும் படுத்துக்கிடக்கும்; அதன் தூண் தலைப்புகளில் கூகையும் சாக்குருவியும் இராத் தங்கும், பலகணிகளில் ஆந்தைகள் அலறும்; கதவுகளின் மேல் காக்கைகள் இருந்து கரையும், கேதுரு மர வேலைப்பாடுகள் அழிக்கப்படும்.
ECTA   அங்கே மந்தைகளும் எல்லாவகை விலங்குகளும் படுத்துக் கிடக்கும்; தூண்களின் உச்சியில் கூகையும் சாக்குருவியும் தங்கியிருக்கும்; பலகணியில் அமர்ந்தவாறு ஆந்தை அலறும்; நிலைக்கதவின்மேல் இருந்தவாறு காகம் கரையும்; கேதுரு மர வேலைப்பாடுகள் அழிக்கப்படும்.