Bible Language

Ecclesiastes 5:18 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   இதோ, உயிரோடிருக்கும்படி தேவன் அருளிச்செய்த நாளெல்லாம் மனுஷன் புசித்துக் குடித்து, சூரியனுக்குக் கீழே தான் படும் பிரயாசம் அனைத்தின் பலனையும் அநுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியமென்று நான் கண்டேன், இதுவே அவன் பங்கு.
IRVTA   இதோ, உயிரோடிருக்கும்படி தேவன் அருளிச்செய்த நாட்களெல்லாம் மனிதன் சாப்பிட்டுக் குடித்து, சூரியனுக்குக் கீழே தான் உழைத்த அனைத்தின் பலனையும் அனுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியமென்று நான் கண்டேன், இதுவே அவன் பங்கு.
ERVTA   உண்டு, குடித்து, இவ்வுலகில் வாழும் குறுகிய வாழ்வில் தான் செய்யும் வேலையில் இன்பம் காண்பதுதான் ஒருவன் செய்யும் சிறப்பான செயல்கள் என்று நான் எண்ணுகிறேன். அவனுக்கு இருப்பதெல்லாம் தேவன் கொடுத்த குறுகிய வாழ்க்கை மட்டுமே. அவனுக்கு வேறெதுவும் இல்லை.
RCTA   (17) ஆகையினால், ஒருவன் உண்டு குடித்து உயிரோடிருக்கும்படி கடவுள் அவனுக்கு அருளிய வாழ்நாள் முழுதும் (அவன்) சூரியன் முகத்தே வருந்திச் செய்த வேலையின் பயனை அனுபவிப்பது நலமென்று எனக்குத் தேன்றியது. இதுவே அவனுடைய பங்கு.
ECTA   ஆகையால், நான் இந்த முடிவுக்கு வந்தேன்; தமக்குக் கடவுள் வரையறுத்திருக்கும் குறுகிய வாழ்நாளில் மனிதர் உண்டு குடித்து, உலகில் நம் உழைப்பின் பயனைத் துய்ப்பதே நலம்; அதுவே தகுந்ததுமாகும்.