Bible Language

Exodus 24:3 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   மோசே வந்து, கர்த்தருடைய வார்த்தைகள் யாவையும் நியாயங்கள் யாவையும் ஜனங்களுக்கு அறிவித்தான்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் ஏகசத்தமாய்: கர்த்தர் அருளின எல்லா வார்த்தைகளின்படியும் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள்.
IRVTA   மோசே வந்து, யெகோவாவுடைய வார்த்தைகள் யாவையும் நீதி சட்டங்கள் யாவையும் மக்களுக்கு அறிவித்தான்; “அப்பொழுது மக்கள் எல்லோரும் ஒரேசத்தமாக: யெகோவா அருளின எல்லா வார்த்தைகளின்படியும் செய்வோம்” என்று மறுமொழி சொன்னார்கள்.
ERVTA   கர்த்தர் கூறிய எல்லா விதிகளையும், கட்டளைகளையும் மோசே ஜனங்களுக்குக் கூறினான். எல்லா ஜனங்களும், "கர்த்தர் கூறின எல்லா கட்டளைகளுக்கும் நாங்கள் கீழ்ப்படிவோம்" என்று ஏகமாய் பதிலுரைத்தனர்.
RCTA   மோயீசன் வந்து ஆண்டவருடைய எல்லா வாக்கியங்களையும் நீதிச் சட்டங்களையும் விவரித்துச் சொன்னார். அதைக் கேட்ட மக்கள் எல்லாரும்: ஆண்டவர் திருவுளம் பற்றின எல்லா வாக்கியங்களின் படியும் நடப்போம் என்று ஒரே குரலாய் மறுமொழி சொன்னார்கள்.
ECTA   எனவே, மோசே மக்களிடம் வந்து ஆண்டவர் சொன்ன அனைத்து வார்த்தைகளையும் விதிமுறைகளையும் அறிவித்தார். மக்கள் அனைவரும் ஒரே குரலாக; "ஆண்டவர் கூறிய வார்த்தைகள் அனைத்தையும் நாங்கள் செயல்படுத்துவோம்" என்று விடையளித்தனர்.